1.
“தனித்தமிழ் வித்தகர்”
என்று அழைக்கப்படுபவர் யார்? மறைமலையடிகள்
2.
நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
3.
தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்”
யார்? வாணிதாசன்.
4.
“ஊமையராய்ச் செவிடராய்க்
குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொல் கேளீர்” என முழங்கியவர் யார்? பாரதியார்.
5.
முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்
எது? சிலப்பதிகாரம்
6.
‘பங்கஜம்’ எனும் சமஸ்கிருத மொழி சொல்லின்
பொருள் என்ன? தாமரை
7.
நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் என்ன? வெ.ராமலிங்கம் பிள்ளை
8.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்” என
கூறியவர் யார்? திருமூலர்
9.
‘மக்கள் கவிஞர்’ என
அழைக்கப்படுபவர் யார்? பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்.
10. ‘தமிழ் தாத்தா’
என அழைக்கப்படுபவர் யார்? உ.வே.சாமிநாதய்யர்