தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிற போட்டி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், 25ம் தேதி முதல், நடைபெற உள்ளது.
திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில்
உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் பயனுறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிற போட்டி தேர்வுகளுக்கும், மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் முன்னோடி இலவசப் பயிற்சி
வகுப்புகள், கல்லுாரி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக்
கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தன்னார்வ
பயிலும் வட்ட நுாலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு குறிப்புகள் எடுக்க வசதியாக
புத்தகங்களும், படிப்பதற்கு இடவசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, தமிழக அரசு
அறிவித்துள்ள போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும், 25ம் தேதி
முதல், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கும்மிடிப்பூண்டி மேற்கு, கே.எல்.கே., ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், காலை, 10:00 மணிக்கு நடைபெறும்.
எனவே, இம்மாவட்டத்தில்
உள்ள அனைத்து வேலை இல்லாத இளைஞர்கள், கல்வி பயின்று வரும் மாணவ -
மாணவியர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, பயனடையலாம். இவ்வாறு அதில்
கூறப்பட்டு உள்ளது.