வினாவிற்கு ஏற்ப
விடையளிப்பது தான் மொழிநடையின் சிறப்பு.
இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறுபெயர்கள்.
விடை எட்டு
வகைப்படும். அவை சுட்டு, மறை, நேர், ஏவல், வினாஎதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என்பன.
1.
சுட்டுவிடை
“சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ,
‘இது' என்பது போல் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.
2.
மறைவிடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
செய்யமாட்டேன் என்பது போல எதிர்மறுத்துக் கூறும் விடை,
எதிர்மறைவிடை.
3.
நேர்விடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
செய்வேன் என்று உடன்பட்டு கூறுவது, நேர்விடை.
4.
ஏவல்விடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
‘நீயே செய்' என்று ஏவி கூறுவது, ஏவல்விடை.
5.
வினாஎதிர்வினாதல் விடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
‘செய்யாமலிருப்பேனா?’ என்று வினாவையே விடையாக கூறுவது, வினாஎதிர்வினாதல் விடை.
6.
உற்றதுரைத்தல் விடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
“உடம்பு சரியில்லை' என்று தனக்கு உற்றதனை விடையாக கூறுவது, உற்றதுரைத்தல் விடை.
7.
உறுவது கூறல் விடை
“இதை செய்வாயா?” என்று வினவியபோது,
‘கை வலிக்கும்' என்று தனக்கு வரப்போவதை விடையாக கூறுவது, உறுவதுகூறல் விடை.
8.
இனமொழி விடை
“ஆடுவாயா?" என்று வினவியபோது, ‘பாடுவேன்' ண் என ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாக கூறுவது, இனமொழி விடை.