உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வு
செய்யப்பட்ட 656 விண்ணப்பதாரர்களின் நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு வரும்
டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 3,578 தேர்வர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 3,578 தேர்வர்கள் பங்கேற்றனர்.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி
மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்
நேர்காணலுக்கு முன்பு நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 656 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தேர்வாணைய
அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின்
பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in -இல் வெளியிடப்பட்டுள்ளது