பரதநாட்டியம்:
·
இந்திய நாட்டியங்களுள் முதன்மையானது.
·
பரத முனிவர் இதனை முதன் முதலில் தொகுத்து
வழங்கியதால் இது தமிழ்நாட்டிற்கு உரிய நாட்டிய கலையே.
·
தஞ்சையில் தோன்றிய கலை இது.
·
மற்ற இந்திய வகை நடனங்களுக்கு இதுவே தாய்.
சாக்கியார் கூத்து:
·
கேரளாவில் உள்ள சாக்கியர் சமூகத்தால் ஆடப்படும்
கூத்து.
·
இது கோயில் வளாகங்களுக்கு உள்ளேயே
ஆடப்படுகிறது.
·
உயர்வகுப்பினர் இதன் ரசிகர்கள்.
·
இதன் நாடகசாலை கூத்தம்பலம் எனப்படும்.
·
இது கேரளாவில் குடியேறிய ஆரியர்களால்
கொண்டுவரப்பட்டது என்பர். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும்.
தமிழ் தொன்மையான கூத்துகளில் சாக்கை கூத்தும் ஒன்று.
·
இது நாடக பாணியிலான ஒரு வகை நடனம்.
·
கையசைப்பும் முகபாவமுமே முதன்மையாக கொண்டு
நிகழ்த்தப்படும்.
·
கிண்ணாரமும் முழவு எனப்படும் மேளமுமே இதன்
இசைக்கருவிகள்
கதக்:
·
இதனுடைய வேர்ச்சொல் கதையாகும். எனவே கதையம்சம்
உள்ள நாட்டியம் கதக் எனப்பட்டது.
·
கதக் நடனத்தின் சிறப்பு அதன் வேகமும்
பாதப்பணிகளும் ஆகும்.
·
உடையலங்காரமும் அங்கச் செழிப்பை
வெளிபடுத்துவதாக இருக்கும்.
கதகளி:
·
கேரளத்தின் ஆதியுன்னத சாஸ்திரீய நுண்மையும்
திட்டமும் வாய்ந்த கலை.
·
இது கலைஞனின் ஒவ்வொரு நரம்பணுவையும் அதிர
வைக்கும் தேர்ந்த பயிற்சியை அடிப்படையாக கொண்டது.
·
இதன் கருக்கள் இராமாயண, மகாபாரத இதிகாச
காட்சிகளை அடியொட்டியவை.
·
இவை சமஸ்கிருதமாக்கப்பட்ட மலையாளத்தில்
எழுதப்படும்.
·
உடையலங்காரங்கள், ஆபரணங்கள், மற்றும் முக
பாவனைகள் இவற்றில் முக்கிய இடம் பெறுகின்றன.
·
வண்ணங்களே குணாதியசத்தையும் பாத்திரப்
படைப்பையும் வெளிக்காட்டும்.
·
கேரள கலாமண்டலம் கதகளியின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டு
கதகளியை அழியாமல் காத்து வருகிறது.
கிருஷ்ணனாட்டம்:
கிருஷ்ணனின் வரலாற்றை எட்டு இரவுகளில் விவரிப்பது. இது
கதகளியை போன்றே இருக்கும்.
ஓட்டம் துள்ளல்:
·
இதுவும் கேரள வகை நாட்டியமே. இது பொதுமக்கள்
கலையாகும். இதன் பாடல்களில் தமிழ் வாடையே வீசும்.
·
இதை ஏழையின் கதகளி என்பர் குஞ்சன் நம்பியார்
இதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
·
சமூக பிரச்சனையையும் சாதி வகுப்புப் பாகுபாட்டு
கொடுமைகளையும் சித்தரிக்கும் எளிய மொழியாகையால் மக்களை கவர்ந்திழுக்கும் ஆடல் இது.
மோகினியாட்டம்:
·
விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை
மயக்கிய வரலாறு இதன் கரு.
·
இதுவும் கேரள வகை நாட்டியம் ஆகும்.
·
இது 16-ம் நூற்றாண்டில்
பிரபலமாகியது.
·
இதில் உடையலங்காரம் கருத்தை கவரும் விதத்தில்
அமைந்திருக்கும்.
குச்சிப்புடி:
·
இது ஆந்திரப்பிரதேச நாட்டிய நாடகம்.
·
இது தமிழ்நாட்டு பாகவத மேளாவை ஒத்திருப்பது.
·
இதன் இலக்கணம் நாட்டிய சாஸ்திரத்திற்குரியது. இது
உடல் இயக்க அசைவுகளை அடிப்படையாக கொண்டது. பிற விஷயங்களில் பரதநாட்டியத்தையே
பின்பற்றுகிறது.
·
தீர்த்த நாராயணரும் சித்தேந்திர யோகியும் இந்த
பாணியை வளர்த்தார்கள்.
·
ஆந்திராவில் உள்ள குச்சிப்புடி என்ற இடமே இதன்
தாயகம்.
மணிபுரி நடனம்:
·
மணிபுரியில் 15 முதல் 18 –ம் நூற்றாண்டு வரை வைணவம் பரவியது. இதன்
பாதிப்பால் ஏற்பட்ட நடனமே மணிபுரி நடனம்.
·
‘லால்ஹரோபா’, ‘ராஸலீலா’ இவையே இதன் கருவாக
அமைகின்றன.
·
‘லால்ஹரோபா’ உலக படைப்பையும் ‘ராஸலீலா’
கிருஷ்ணனின் லீலைகளையும் அடிப்படையாக கொண்டது.
·
இவ்வகை நடனத்தில் மேளமும் ஜால்ராவும் முக்கிய
பங்கு வகிக்கிறது.
ஒடிஸி நடனம்:
·
இது ஒரியாவை சேர்ந்த நாட்டியம் ஆகும். இதுவும்
நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதே.
·
சமண மன்னனாகிய காரவேலன் இவ்வகை நடனத்தில்
தாண்டவம் ஆடுவதிலும் அபிநயம் பிடிப்பதிலும் சிறந்தவர்
·
கரணங்களும் அடிப்படை பாவங்களும் இதற்கு
முக்கியமானவை.
·
பூமி நமஸ்காரம், பாட்டு, பல்லவி, அஷ்டபதி இவையே
இதன் முறையாக இருக்கும்.
·
இறுதியில் ஆடப்படும் ‘மோக்ஷா’ தில்லானாவை
ஒத்திருக்கும்.
யக்ஷகானம்:
·
இது கர்நாடகத்திற்கு உரிய நடனம்.
·
இது கிராமிய கலையாக அங்கு போற்றப்படுகிறது.
·
இது நாட்டியம், நாடகம் இரண்டும் கலந்தது.
·
இதன் அடிப்படை கானா எனப்படும் பாட்டாகும்.
·
புராண இதிகாசங்களே இதன் கரு.
·
‘சூத்திரக்காளி’ எனப்படும் நாடகம் நடத்துவோரும்
‘விதூஷகள்’ எனப்படும் கோமாளியும் உண்டு.
கிராமிய நடனங்கள்:
இந்தியாவெங்கும் கிராமங்கள்
தோறும் கரகம், கோலாட்டம், கும்பி, ஒயிலாட்டம், மயிலாட்டம், புவியாட்டம்,
தெருக்கூத்து போன்ற பல்வகை நடனங்களும் நாட்டியங்களும் உண்டு.