ர, ற, ல, ள, ழ, ன, ந, ண ஆகிய ஒலியில் மாறுபாடு உள்ள சொற்களின் ஒலி வேறுபாடறிந்து பொருளை அறிதல் இப்பகுதியாகும்..
லகர-ளகர -ழகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
ரகர - றகரப் பொருள் வேறுபாடு
னகர - ணகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
நகர – னகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
லகர-ளகர -ழகரச் சொற்களின் பொருள் வேறுபாடு
அலி | ஆண், பெண் இல்லாமை |
அளி | கொடு, கருணை |
அழி | நீக்கு |
ஒலி | சத்தம் |
ஒளி | வெளிச்சம் |
ஒழி | நீக்கு |
கலை | ஓவியம் |
களை | வேண்டாத புல் |
கழை | மூங்கில் |
காலை | முற்பகல் |
காளை | எருது |
குலம் | குடி |
குளம் | நீர்நிலை |
வேலை | பணி |
வேளை | பொழுது |
கலம் | கப்பல் |
களம் | இடம் |
கொல் | கொலை செய் |
கொள் | பெற்று கொள் |
தால் | நாக்கு |
தாள் | பாதம் |
தாழ் | தாழ்ப்பாள் |
வளி | காற்று |
வழி | பாதை |
வெல்லம் | இனிப்பு |
வெள்ளம் | நீர்ப்பெருக்கு |
கலி | துன்பம் |
கழி | தடி |
களி | மகிழ்ச்சி |
வாழை | தாவர வகை |
வாளை | மீன் வகை |
தலை | உடல் உறுப்பு |
தளை | கட்டு |
தழை | இலை |
வால் | விலங்கின் உறுப்பு |
வாள் | கருவி |
வாழ் | உயிரோடிரு |
உலவு | நடமாடு |
உளவு | வேவு பார்த்தல் |
உழவு | பயிர் தொழில் |
கல் | கற்கள் |
கள் | மது |
ஆல் | ஆலமரம் |
ஆள் | நபர் |
ஆழ் | மூழ்கு |
எல் | சூரியன் |
எள் | எண்ணெய் வித்து |
அலை | கடல் அலை |
அழை | கூப்பிட்டு |
அளை | குகை |
குளி | நீராடு |
குழி | பள்ளம் |
விளி | அழை |
விழி | கண், கண் திற |
ஆளி | அரசன் , சிங்கம் |
ஆழி | கடல் |
ஆள்வார் | ஆட்சி செய்பவர் |
ஆழ்வார் | திருமால் அடியவர் |
உளி | கருவி |
உழி | இடம் |
கிளவி | சொல் |
கிழவி | முதியாள் |
குலவி | ஒன்று சேர்தல் |
குளவி | வண்டு வகை |
குழவி | குழந்தை |
கூளம் | குப்பை |
கூழம் | எள் |
நாளி | மூங்கில் |
நாழி | நாழிகை |
இலை | தழை |
இளை | மெலிதல் |
இழை | நூல் |
உலை | கொதிகலன் |
உளை | பிடரி மயிர் |
உழை | உழைத்தல், மான் |
அரை | பாதி |
அறை | வீட்டின் உள்ளிடம் |
அரிவை | பெண் |
அறிவை | தெரிந்து கொள் |
இரங்கு | கருணை கொள் |
இறங்கு | கீழே இறங்கு |
இரை | தீனி |
இறை | கடவுள் |
இரும்பு | உலோகம் |
இறும்பு | புதர் |
உரல் | மாவிடிக்கும் உரல் |
உறள் | பொருத்துதல் |
உரவு | வலிமை, உப்பு |
உறவு | தொடர்பு, கலந்து வாழ்தல் |
ஒரு | ஒன்று |
ஒறு | தண்டித்தல் |
கரை | ஓரம் |
கறை | அழுக்கு |
கூரை | வீட்டின்மேற்பகுதி |
கூறை | ஆடை |
கூரிய | கூர்மையான |
கூறிய | சொல்லிய படி |
குரங்கு | விலங்கு |
குறங்கு | தொடை |
குரவர் | சமயப் பெரியவர்கள் |
குறவர் | பழங்குடியினர் |
பரவை | கடல் |
பறவை | பறக்கும் உயிரினம் |
அரம் | கருவி |
அறம் | தருமம் |
அரி | நறுக்கு |
அறி | தெரிந்து கொள் |
ஆர | நிதானம் |
ஆற | சூடு தணிய |
இரத்தல் | யாசித்தல் |
இறத்தல் | சாதல் |
உரு | வடிவம் |
உறு | மிகுதி |
உரை | பேச்சு |
உறை | மூடி |
ஏரி | பெரிய குளம் |
ஏறி | மேலே ஏறி |
எரி | தீ |
எறி | வீசு |
கரி | அடுப்புக்கரி, யானை |
கறி | காய்கறி |
குரை | நாய் குரைத்தல் |
குறை | சுருக்குதல் |
செரித்தல் | உணவு சீரணமாகுதல் |
செறித்தல் | திணித்தல் |
தரி | அணிந்து கொள் |
தறி | வெட்டு |
திரை | அலை |
திறை | கப்பம் |
நிரை | வரிசை |
நிறை | நிறைத்து வைத்தல் |
பரந்த | பரவிய |
பறந்த | பறவை பறந்த |
பரி | குதிரை |
பறி | பிடுங்கு |
பொரு | போர் செய்தல் |
பொறு | பொறுத்துக் கொள் |
பொரி | நெல் பொரி |
பொறி | இயந்திரம் |
பெரு | பெரிய |
பெறு | அடை |
துரவு | கிணறு |
துறவு | துறந்து விடுதல் |
மரம் | தாவரம் |
மறம் | வீரம் |
வருத்தல் | துன்புறுத்தல் |
வறுத்தல் | காய்களை வறுத்தல் |
விரல் | கை விரல் |
விறல் | வெற்றி |
சொரி | பொழிதல் |
சொறி | அரிப்பு (சிரங்கு வகை) |
புரம் | நகர் |
புறம் | வெளி |
மாரி | மழை |
மாறி | வேறுப்பட்டு |
ஊர | நகர |
ஊற | சுரக்க |
அரு | அரிய |
அறு | வெட்டு, துண்டி |
அருகு | பக்கம் |
அறுகு | ஒரு புல் |
அருந்து | குடி, சாப்பிடு |
அறுந்து | அறுபட்டு |
அலரி | ஒரு வகை பூ |
அலறி | கதறி |
இரு | உட்கார் |
இறு | அறு |
அன்னம் | பறவை |
அண்ணம் | மேல்வாய் |
ஆனை | யானை |
ஆணை | கட்டளை |
உன் | உன்னுடைய |
உண் | சாப்பிடு |
காண் | பார் |
கான் | காடு |
தன்மை | இயல்பு |
தண்மை | குளிர்ச்சி |
நான் | யான் |
நாண் | கயிறு |
பனி | குளிர் |
பணி | வேலை |
மனம் | உள்ளம் |
மணம் | நறுமணம் |
வன்மை | உறதி |
வண்மை | ஈகை |
ஊன் | மாமிசம் |
ஊண் | உணவு |
கன்னன் | கர்ணன் |
கண்ணன் | கிருஷ்ணன் |
தின்மை | தீமை |
திண்மை | வலிமை |
கன்னி | பெண் |
கண்ணி | அரும்பு, பூமாலை |
கனி | பழம் |
கணி | எண்ணுவாயாக |
முந்நாள் | மூன்று நூல் |
முன்னாள் | முந்தைய நூல் |
முந்நூல் | மூன்று நூல் |
முன்னூல் | முதல் நாள் |
நந்நூல் | நமது நூல் |
நன்னூல் | நல்ல நூல் |
அந்நாள் | அந்த நாள் |
அன்னாள் | அப்பெண் |
எந்நாள் | எந்த நாள்? |
என்னாள் | எனது நாள் |
தேநீர் | குடிக்கும் தேநீர் |
தேனீர் | தேன் கலந்த நீர் |