பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் புதையுண்ட தாவரங்களும் விலங்குகளும் அதிக அழுத்தத்தினாலும் வெப்பத்தினாலும் காற்றில்லா சூழலில் சிதைவுற்று நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களாக மாறியுள்ளன.
நிலக்கரி:
1774 ஆம் ஆண்டு
இந்தியாவில் முதன்முதலில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது.
நிலக்கரி உற்பத்தியில் உலகில் இந்தியா மூன்றாவது
இடத்தில் உள்ளது.
ஹைட்ரோகார்பன்களின் முக்கிய மூலம் நிலக்கரி ஆகும்.
கார்பனின் சதவீதத்தை அடிப்படையாக கொண்ட நிலக்கரியின்
வகைகள்:
நிலக்கரி வகை
|
கார்பனின் அளவு
|
பீட்
|
10-15%
|
லிக்னைட்
|
25-35%
|
பிட்டுமினஸ்
|
45-86%
|
ஆந்திரசைட்
|
87-97%
|
நிலக்கரியினை காய்ச்சி வடிக்கும் போது நிலக்கரி வாயு,
அம்மோனியா நீர்கரைசல், கரித்தார், கல்கரி போன்ற பகுதிப்பொருட்கள்
கிடைக்கின்றன.
பெட்ரோலியம்:
கிடைக்குமிடங்கள்: குவைத், ஈரான்,
ஈராக், ரஷ்யா, மெக்சிகோ, அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக அளவில் பெட்ரோலியம்
உற்பத்தி செய்கின்றன.
இந்தியாவில்: அஸ்ஸாம்,
குஜராத், மகாராஷ்டிரா (மும்பை), ஆந்திரா (கோதாவரி, கிருஷ்ணா), தமிழ்நாடு (காவிரி
ஆற்றுப்படுகை)
பின்னக் காய்ச்சி வடித்தல்:
வெவ்வேறு கொதிநிலைகள் கொண்ட திரவங்களின் கலவையை
வெப்பப்படுத்தி குளிரச் செய்து பிரித்தெடுக்கும் முறை பின்னக் காய்ச்சி
வடித்தல் எனப்படும்.
கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும்
போது:
கச்சா எண்ணெய் உலையின் அடியில் அனுப்பப்பட்டு 400◦C வெப்பப்படுத்தப்படுகிறது.
பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் துணைப்பொருட்கள்:
பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், உயவு எண்ணெய், எரிபொருள்
எண்ணெய், பாரபின் மெழுகு, பிட்டுமென் போன்ற துணை பொருள்கள் கிடைக்கின்றன.
பெட்ரோலியம் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது.
இயற்கை வாயு:
சதுப்பு நிலப்பகுதிகளிலும் சாக்கடை கழிவுகளிலும் தாவரங்கள்
மட்கும் போது இயற்கை வாயு உருவாகிறது.
இயற்கை வாயுவில் 90% மீத்தேன் உள்ளது.
கிடைக்குமிடங்கள்:
திரிபுரா, இராஜஸ்தான், மகாராஷ்டிரா (மும்பை), ஆந்திரா
(கோதாவரி, கிருஷ்ணா), தமிழ்நாடு (காவிரி டெல்டா).
பயன்படும் வழிகள்:
CNG – Compressed Natural Gas
LNG – Liquified Natural Gas
PCRA – பெட்ரோலியம் பாதுகாப்பு
ஆராய்ச்சி குழுமம்