சிலர் பேசுவதை அப்படியே எழுதுகிறார்கள். இதனால் கொச்சையான சொற்கள் தொடர்களில்  இடம்பெற்று மொழி வளம் கெடுகிறது.இக்குறையை தவிர்க்கக் கொச்சைச் சொற்களுக்குரிய சரியான சொற்களைத் தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.
கொச்சைச் சொல் சரியான சொல்
அண்ணாக்கயிறு அரைஞாண்கயிறு
அட மழை அடை மழை
தாவாரம் தாழ்வாரம்
முழுங்கு விழுங்கு
அவைகள் அவை
எடஞ்சல் இடைஞ்சல்
எலிமிச்சம் பழம் எலுமிச்சை பழம்
கடப்பாறை கடப்பாரை
கத்திரிக்காய் கத்தரிக்காய்
கைமாறு கைம்மாறு
கோடாலி கோடரி
தலகாணி தலையணை
பொடைத்தாள் புடைத்தாள்
இடது பக்கம் இடப்பக்கம்
வெங்கலம் வெண்கலம்
புஞ்சை புன்செய்
பதட்டம் பதற்றம்
நோம்பு நோன்பு
தடுமாட்டம் தடுமாற்றம்
கருவேப்பிலை கறிவேப்பிலை
ஒருவள் ஒருத்தி
அருகாமையில் அருகில்
அதுகள் அவை
வெண்ணீர் வெந்நீர்
இன்னிக்கு இன்றைக்கு
எண்ணை எண்ணெய்
கழட்டு கழற்று
துகை தொகை
சிகப்பு சிவப்பு
பண்டகசாலை பண்டசாலை
புண்ணாக்கு பிண்ணாக்கு
ரொம்ப நிரம்ப
வத்தல் வற்றல்
வெண்ணை வெண்ணெய்
பசும்பால் பசுப்பால்
வலதுபக்கம் வலப்பக்கம்
பேரன் பெயரன்
பேத்தி பெயர்த்தி
வேர்வை வியர்வை
முயற்சித்தார் முயன்றார்
சுவற்றில் சுவரில்
நஞ்சை நன்செய்
தின்னீர் திருநீறு
சீயக்காய் சிகைக்காய்
நாகரீகம் நாகரிகம்
திருவாணி திருகாணி
சிலவு செலவு
சாணி சாணம்
பாவக்காய் பாகற்காய்
உசிர் உயிர்
ஊரணி ஊருணி
கடக்கால் கடைக்கால்
வண்ணாத்திபூச்சி வண்ணத்துப்பூச்சி
கோர்வை கோவை
அத்தினி அத்தனை
இரும்பல் இருமல்
ஈர்கலி ஈர்கொல்லி
உருச்சி உரித்து
எகனை,மோகனை எதுகை,மோனை
கண்ணாலம் கல்யாணம்
மாங்காமரம் மாமரம்
விடிகால விடியற்காலை
வெட்டிப் பேச்சு வெற்றுப்பேச்சு
ஒசத்தி உயர்வு
புட்டு பிட்டு
கவுனி கவனி
மோர்ந்து மோந்து
மெனக்கெட்டு வினைக்கெட்டு
வெய்யல் வெயில்
ஆம்பளை ஆண்பிள்ளை
பொம்பளை பெண்பிள்ளை
அளகு அழகு
 
Top