நமது முன்னோர்கள் எப்பொருளை எந்த சொல்லால் வழங்கினரோ அப்பொருளை அச்சொல்லால் வழங்குவது மரபுப் பெயராகும்.
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
விலங்குகளின் வாழிடங்கள்
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
செடி, கொடி, மரங்களின் தொகுப்புப் பெயர்கள்
பொருள்களின் தொகுப்புப் பெயர்கள்
பறவை எழுப்பும் ஒலி
விலங்குகள் எழுப்பும் ஒலி
பெயருக்கேற்ற வினைச்சொற்கள்
பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
அணிற்பிள்ளை குருவிக்குஞ்சு பசுங்கன்று யானைக்கன்று கழுதைக்குட்டி குரங்குக்குட்டி ஆட்டுக்குட்டி சிங்கக்குருளை பன்றிக்குட்டி | கீரிப்பிள்ளை புலிப்பறள் எலிக்குட்டி கோழிக்குஞ்சு மான்கன்று நாய்க்குட்டி குதிரைக்குட்டி பூனைக்குட்டி எருமைக்கன்று |
ஆட்டுப்பட்டி யானைக்கூடம் குதிரைக்கொட்டில் மாட்டுத்தொழுவம் வாத்துப்பண்ணை |
சோளத்தட்டு வேப்பந்தழை மூங்கில் இலை பனையோலை மாவிலை பலா இலை ஈச்ச ஓலை தென்னங்குரும்பை கத்தரிப்பிஞ்சு கொய்யாப்பிஞ்சு மாவடு | வாழையிலை தாழைமடல் கமுகங்கூந்தல் தென்னையோலை நெல்தாள் முருங்கைக்கீரை அவரைப்பிஞ்சு முருங்கைப்பிஞ்சு வாழைக்கச்சல் பலாமூசு வெள்ளரிப்பிஞ்சு |
பூஞ்சோலை கருப்பங்கொல்லை பனந்தோப்பு தேயிலைத்தோட்டம் தென்னந்தோப்பு பலாத்தோப்பு | வாழைத்தோட்டம் மாந்தோப்பு சவுக்குத்தோப்பு சோளக்கொல்லை வேலங்காடு ஆலங்காடு |
ஆட்டுமந்தை வீரர்படை எறும்புசாரை கற்குவியல் மாட்டு மந்தை | பசு நிரை திராட்சைக்குலை யானைக்கூட்டம் வைக்கோல்போர் |
ஆந்தை அலறும் குயில் கூவும் கிளி கொஞ்சும்/ பேசும் வாத்து கத்தும் மயில் அகவும் வண்டு முரலும் சேவல் கூவும் | கோழி கொக்கரிக்கும் காகம் கரையும் கோட்டான் குழறும் குருவி கீச்சிடும் கூகை குழறும் புறா குனுகும் வானம்பாடி பாடும் |
நாய் குரைக்கும் யானை பிளிறும் குதிரை கனைக்கும் பன்றி உறுமும் சிங்கம் முழங்கும்/ கர்ஜிக்கும் ஆடு கத்தும் | நரி ஊளையிடும் புலி உறுமும் எருது எக்காளமிடும் எலி கீச்சிடும் குரங்கு அலப்பும் பூனை கீலும் |
அப்பம் தின் திரியை கொளுத்து களை பறி நெல் தூற்று கதிர் அறு காய்கறி அரி பழம் தின் கூரை வேய் குடம் வனை பாய் பின்னு தீ மூட்டு வெற்றிலை தின் விடை கூறு சோறு சமை அம்பை எய் சோறு உண் கிளையை ஒடி மரம் வெட்டு கவிதை இயற்று | ஏர் உழு நார் கிழி இலை பறி கல் உடை நீர் பாய்ச்சு பாட்டுப்பாடு கோலம் இடு தயிர் கடை விளக்கேற்று பால் பருகு படம் வரை உணவு பரிமாறு விதையை விதை சந்தனம் பூசு நாற்று நடு மலர் கொய் நீர் குடி விளக்கை ஏற்று கட்டுரை எழுது |