குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 9 ஆயிரத்து 351 இடங்களுக்கு வரும் பிப். 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக TNPSC செவ்வாய்க்கிழமை
அறிவிப்பு வெளியிட்டது.
முதன்முறையாக... குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள்
ஒரே தேர்வாக இப்போது நடத்தப்பட உள்ளன. இதனால் முதல் முறையாக அதிகளவிலான காலிப்
பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை TNPSC நடத்துகிறது.
மொத்த காலியிடங்கள்: 9351
கிராம நிர்வாக அலுவலர் - 494
இளநிலை உதவியாளர் – 4096
இளநிலை உதவியாளர் (பிணையம்) - 205
தட்டச்சர் - 3463
வரித் தண்டலர் (நிலை -I) – 48
நில அளவர் - 74
வரைவாளர் - 154
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை - III)- 815
போன்ற பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் .
எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே www.tnpsc.gov.in
சமர்ப்பிக்கலாம்.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப்
பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக்
கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150
ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150
செலுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர்
புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர்,
மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர்
தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த
வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு
தேர்ச்சியாகும்.
3 மணி நேரம் எழுத்துத் தேர்வு: எழுத்துத்
தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. பொது
அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100
கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017
வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள்: 15.12.2017
தேர்வு நடைபெறும் நாள்: 11.2.2018
கூடுதல் தகவல்களுக்கு :
http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-tamil.pdf , http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-english.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.