TNPSC குரூப் -2 தேர்வுக்கான மாதிரி நேர்காணல் பயிற்சி,
சென்னை அண்ணா நகர் திருமங்கலத்திலுள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் வரும்
வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக, அகாதெமி நிர்வாகம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், நன்னடத்தை அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 1,241 குரூப் - 2 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தேர்வர்களைத் தயார்படுத்த ஃபோக்கஸ் அகாதெமி மாதிரி நேர்காணல் பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ.10) தொடங்க உள்ளது.

அரசுத் துறை உயரதிகாரிகள், துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் இந்தப்
பயிற்சி வகுப்புகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ள
தேர்வர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
தேர்வர்கள் அகாதெமிக்கு நேரில் வந்து தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 82489 51454, 044-2615 5686 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.