.
பண்புத்தொகை:
ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.
பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உறுப்பு மறைந்து நிற்க பண்புப்பெயரோடு   பண்புப்பெயர் தொடர்வதாகும்.
எ.கா: செந்தாமரை  -- வண்ணப் பண்புத்தொகை
வட்டநிலா  - வடிவப் பண்புத்தொகை
முத்தமிழ்  - அளவுப் பண்புத்தொகை
இன்சொல்  - சுவைப் பண்புத்தொகை
இவை விரியும் போது செம்மையாயகிய  தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என்பதாகும்.
சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் "மை" விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.
இன்னுயிர்’  இச்சொல்லைப்   பிரிக்கும்போது இனிமை + உயிர்    எனப் பிரியும். இதில் நிலைமொழியில் "மை" விகுதி சேர்ந்து வந்திருப்பதால்
இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.
உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
பைங்கூழ் - பசுமை + கூழ் ==> பண்புத்தொகை
செவ்வேள் - செம்மை + வேள் ==>பண்புத்தொகை
செந்தமிழ் - செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
நெடுந்தேர் - நெடுமை + தேர் ==> பண்புத்தொகை
பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

செந்தமிழ் கடுஞ்சொல்
நெடுந்தேர் பெரும்பேறு
மெல்லடி செம்பொன்
கருவிழி செந்தீ
குறுநடை செந்தமிழ்
பெருமகள் அருவிலை
நெடும்படை அருவினை
நெடுந்திரை இன்னமுது
நற்றூண் புன்கண், மென்கண்
நல்லுயிர் தண்கடல்
நல்லருள் சிறியன்
நற்செயல் தொல்கவின்
தொல்லுலகம் ஆரமிர்து
செங்கதிரோன் தொன்மக்கள்
கருங்கோல் பைந்நிறம்
பெருந்தேன் குறுநகை
நெடுமதில் நற்பயன்
செந்நாய் பழந்தமிழ்
கருமுகில் இருநிலம்
வெண்மதி ஒண்பொன்
இன்யாழ் வெந்தழல்
இருவிசும்பு வன்காயம்
செவ்வாய் மெல்லிதழ்
நல்யாழ் ஒண்பதம்
இருங்கடல் மென்குரல்
பைம்பொன் செங்கீரை
தொகை சொற்கள் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
 
Top