கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும், குரூப்-4
தேர்வுக்கு, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி பெற
விண்ணப்பிக்குமாறு, தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு துறை
துணை இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் மூலம், வி.ஏ.ஓ.,
இளநிலை உதவியாளர், வரி தண்டலர்
உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு, குரூப் 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வு எழுத விரும்புவோர், டிச.,
13ம் தேதிக்குள், www.tnpscexams.net/
www.tnpscexams.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து அனுப்பலாம்.
இத்தேர்வுக்கு
விண்ணப்பித்தோருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும்
வட்டத்தின் மூலம், இலவச பயிற்சிகள்
அளிக்கப்படும். சிறந்த
வல்லுனர்களை கொண்டு, வகுப்பு கையாள்வதோடு,
இலவச பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வகுப்பில் பங்கேற்க,
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன், பாஸ்போர்ட் சைஸ்
போட்டோவை இணைத்து, டிச., 6ம் தேதி, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில்
விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.