இராம + அயனம்= இராமாயணம்
வடமொழி இராமாயணத்தை எழுதியவர்  வால்மீகி முனிவர்.
தமிழில் எழுதியவர் (வழிநூல்)     -  கம்பர்.
இராமனுடைய வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
இராம + அயனம்= இராமாயணம். இது வட சொற்புணர்ச்சி, ரகரம் தமிழ் சொல்லின் முதல் எழுத்தாகாது. ஆகையால் இலக்கண விதிப்படி இகரத்தை முதலில் சேர்த்து  இராமாயணம் எனக் குறிக்கபடுகிறது.
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார். அவதாரம் என்ற வட சொல்லுக்கு ‘மேலிருந்து வந்தது' என்று பொருள்.
கம்பராமாயணம் 6 காண்டங்களை கொண்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் , கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்.
கதையின் பின் தொடர்ச்சியாக உத்திர காண்டத்தை ஒட்டகூத்தர் எழுதினார்.
காண்டம் - கதையின் பெரும் பிரிவை குறிக்கும்.
படலம் என்பது சிறு பிரிவை குறிக்கும்.
பெருங்காப்பியத்திற்கு  உரிய  இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. பொருளமைதியலும், அணி அமைவலும் நடையாலும் உயர்ந்தது.
கம்பர் பிறந்த ஊர், தேரழுந்தூர்- நாகை மாவட்டம்.
பெற்றோர்: ஆதித்தன்.
கம்பரை புரந்த புரவலர் ‘சடையப்ப வள்ளல்'.
கம்பர் இயற்றிய பிற நூல்கள் -  சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
கம்பர் காலத்தில் வாழ்ந்தவர்கள் - செயங்கொண்டார், ஒட்டகூத்தர்.
கல்வியில் பெரியர் கம்பர்', ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்', ‘விருத்தமெனும் ஒண்பாவில் உயர்கம்பன்' என்று கம்பன் புகழப்படுகிறார்.
 
Top