1. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர்? திருவள்ளுவர்
2. ‘வறிது நிலைஇய காயமும்’ என்ற புறநானூற்று பாடல்
உணர்த்துவது? வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு
3. பெருங்கதையில் வரும் எந்திரயானை கிரேக்க தொன்மத்தில் குறிப்பிடப்படும்
------- இணைத்து பேசப்படும் எந்திரக் குதிரையுடன் ஒத்தது. டிராய் போர்
4. தமிழர் தம் வாழிடங்களை ----------- பாகுபடுத்தியுள்ளனர். நிலத்தின் தன்மைக்கேற்ப
5. ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ என்ற குறளின் மூலம்
திருவள்ளுவர் எந்த நிலத்தை சுட்டுகிறார்? களர் நிலம்
6. தமிழரின் மருத்துவ முறையானது சித்த
மருத்துவம்
7. ‘கண்ணிடந் தப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்’ என்று எந்த
மருத்துவத்தை சுட்டுகிறது? அறுவை மருத்துவம்
8. ‘புல்லாகிப் பூடாய்’ என தொடங்கும் திருவாசக வரிகள் இதனை
பற்றி விரிவாக கூறுகிறது? பல்வகை உயிரிகளின் பரிணாம
வளர்ச்சி
9. திருவள்ளுவர் மழை வளத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்? அமிழ்தம்
10. சித்த மருத்துவத்தை வளர்த்தவர்கள்? சித்தர்கள்