தமிழக அரசின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  ஈடுபட்டு வருகிறது. தற்சமயம் அரசுக் கல்லுாரிகளில் காலியாக  இருக்கும் லைப்ரரியன்,லைப்ரரி ஆபிசர், இன்பர் மேஷன் ஆபிசர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: College Librarian in Government Arts and Science Colleges.
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: லைப்ரரியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், முதுநிலை லைப்ரரியன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் நெட் மற்றும் செட் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் மதிப்பெண்களையும் தர வேண்டியிருக்கும்.
பணியின் பெயர்: District Library Officer
காலியிடங்கள்: 9
கல்வித்தகுதி: மாவட்ட நுாலக அதிகாரி பதவிக்கு முதுநிலைப் பட்டப் படிப்பை, கலை அல்லது அறிவியல் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஏதாவது ஒரு நுாலகத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டு சூப்பர்வைசராகப் பணிபுரிந்த அனுபவமும் தேவைப்படும்.
பணியின் பெயர்: Assistant Librarian and Information Officer for Anna Centenary Library in Public Libraries Department
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்  ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், நெட்/செட் தேர்வு மதிப்பெண்கள், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.200

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.12.2017
கூடுதல் விபரங்களுக்கு : http://www.tnpsc.gov.in/notifications/2017_27_NEW_LIBRARIAN_NOTIFICATION.pdf


 
Top