1.
வெற்றிலை நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்? சினையாகு பெயர்
2.
தொழிற்பெயரின் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும்
வந்து தொழிலை உணர்த்துவது? முதனிலை தொழிற்பெயர்
3.
“படித்து தேறினான்” என்பதன் இலக்கணக்குறிப்பு? தெரிநிலை வினையெச்சம்
4.
தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளிலிருந்து
வந்து தமிழில் வழங்கும் சொற்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? திசைச்சொல்
5.
ஈரெழுத்து சொல்லாக மட்டுமே வரும் குற்றியலுகரம்?
நெடில் தொடர் குற்றியலுகரம்
6.
“பேறு” என்பதன் இலக்கணக்குறிப்பு? முதனிலை திரிந்த தொழிற்பெயர்
7.
“குகைப்புலி” எவ்வகையான வேற்றுமைத்தொகை? ஏழாம் வேற்றுமைத்தொகை
8.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது யாருடைய
பாடல்வரிகள்? கண்ணதாசன்
9.
மாணிக்கவாசகர் கட்டிய கோயில் எங்குள்ளது? திருப்பெருந்துறை
10.
நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்? பெயர் தெரியவில்லை