1. கம்பராமாயத்திற்கு கம்பர் இட்ட பெயர்? இராமாவதாரம்
2. கம்பராமாயணம் ஒரு வழிநூல்.
3. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது? ஆறு
4. இராமாயண மாந்தரின் வடசொற் பெயர்களை எதன் நெறிப்படி
தமிழ்படுத்தினார் கம்பர்? தொல்காப்பியம்
5. சடையப்ப வள்ளல் யார்? கம்பரை
ஆதரித்தவர்
6. ‘மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும்’ என்ற
செய்யுளில் பூகம் என்பதன் பொருள்? பாக்குமரம்
7. எயினரின் இறையோன்? வேடர்
தலைவன்
8. அன்பே வடிவான வேட்டுவத் தலைவன் யார்? குகன்
9. கம்பர் பிறந்த ஊர் எது? தேரழுந்தூர்
10. ‘ஆய கலையின் ஆயிரம் அம்பிக்கு’ இதில் அம்பி யார்? படகு
11. ‘தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்’ இதில் நயனம் என்பதன்
பொருள்? கண்கள்
12. ‘இந்துவின் நுதலோளோடு’ யார்?
சீதை