1.       புத்த சமய காப்பியமான மணி மேகலையின் முதல் காதையின் பெயர் என்ன? இந்திர விழவூரெடுத்த காதை


2.       “தென்னவன் பிரமராயன்” எனும் பட்டத்தை பெற்றவர் யார்? மாணிக்கவாசகர்


3.       புதுக்கவிதையில் அறிவியலை புகுத்தியவர் யார்? தருமு சிவராமு


4.       வீரமாமுனிவர் எந்த இடத்தில் இயற்கை எய்தினார்? அம்பலக்காடு


5.       எட்டயபுரம் மன்னரின் அவைக்கள புலவராக விளங்கிய கடிகை முத்துப்புலவரின் மாணவர் யார்? உமறுப்புலவர்


6.       நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் தொன்மையானது எது? தொல்காப்பியம்


7.       அழகர் கிள்ளிவிடு தூது நூலில் உள்ள கண்ணிகள் எத்தனை? 239 கண்ணிகள்


8.       திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர் யார்? சுந்தரர்


9.       நற்றிணை பாடல்களை பாடியவர்கள் எத்தனை பேர்? இருநூற்று எழுபத்தைவர்


10.   தாருகன் என்ற அசுரனின் மார்பை பிளந்தவள் யார்? துர்க்கை




 
Top