தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில், 24 காலியிடங்களுக்கு, 2013ல் தேர்வு நடந்தது. இதில், 51 பேருக்கு, வரும், 30ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது
  • தடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு, 30 காலியிடங் களுக்கு, 2016ல் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 66 பேருக்கு, அக்., 25ல் நேர்காணல் தேர்வு நடக்கும்
  • கைத்தறி துறை உதவி இயக்குனர் பணிக்கு, 14இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில், தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 12 பேருக்கு, வரும், 26ம் தேதி நேர்காணல் நடக்கும்
  • சிறை அதிகாரி பணியில், ஆறு இடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 18 பேருக்கு, 27ம் தேதி நேர்காணல் நடக்கும்
  • புவியியலாளர், உதவி புவியியலாளர் பணியில், 53 இடங்களுக்கு, 2016 ஜூனில் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற, 141 பேருக்கு, அடுத்த மாதம், 6,7ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..




 
Top