பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு 2017-ஆம் ஆண்டு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக் குழுத் தலைவர் சாரா டேனியல் அதனை அறிவித்தார்.
இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினை பிரிட்டன்
எழுத்தாளர் கசுவோ இசிகுரோ வென்றார். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவருக்கு வழங்கப்பட
உள்ளது
தற்பொழுது 62 வயதாகும் கசுவோ இசிகுரோ ஜப்பானின்
நாகசாகி நகரில் பிறந்தவர்.பின்னர் இங்கிலாந்தில் குடியேறினார். இவர் ஆங்கிலத்தில்
ஏராளமான சிறுகதைகள் மற்றும் ஐந்து நாவல்களை எழுதியுள்ளார்.