கோலாப்பூரில் 1866 மே 9 ல் பிறந்தார்.
பதினெட்டு வயதினில் படிப்பை முடித்த அவர் 20 வயதில் பேராசிரியராகவும் 22 வயதில் பம்பாய் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் 39 வயதில் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
இவரது குரு - மஹா கோவிந்தரானடே.
பூனா பெர்கூசன் கல்லூரியில் வரலாறு மற்றும் பொருளியல் பேராசிரியாக வாழ்கையை தொடங்கிய கோகலே கல்வி பணியில் அதிக ஆர்வம் காட்டினார். பின் அதே கல்லூரியில் முதல்வராக பதவி வகித்தார்.
ரானடே தொடங்கிய தக்காண கல்வி சங்கத்தில் சேர்ந்தார்.
கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் மசோதாவை மத்திய சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
தக்காண சபையின் கௌரவ செயலாளராக பணியாற்றினார்.
சமூக தொண்டு புரியும் நோக்குடன் இளைஞர்களை உருவாக்கும் இந்திய ஊழியர் சங்கத்தை (Servant of India Society) நிறுவினார்.
பம்பாய் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய கோகலே 1892 – ஆம் ஆண்டு கவுன்சில் சட்டத்தின் ஒன்றுமில்லாத தன்மையை வெளிபடுத்தினார்.
உப்புவரி மற்றும் படைச்செலவை குறைக்க வேண்டுமென்றும் இந்தியர்களுக்கு உயர்பதவி அளிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் கூறினார்.
1911-ல் அரசுத் துரோக சட்டத்தை எதிர்த்த அவர் 1910-ல் கொண்டு வரப்பட்ட செய்தித்தாள் சட்டத்தை எதிர்க்காதது குறிபிடத்தக்கது.
1895-ல் காங்கிரசில் செயலாளராக பதவி ஏற்றார்.
1905-ல் காசியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுதேசி இயக்கத்தின் ஒரு அம்சமான உள்நாட்டு பொருட்களை உபயோகித்தல் என்பதை ஆதரித்த பொது வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் என்பதை ஆதரிக்கவில்லை.
1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளின் தலைவராக விளங்கினார்.
தீவிரவாதிகளை காங்கிரசை விட்டு விரட்டுவதில் வெற்றி பெற்றார்.
1905- ல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்களைப் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டதும் சென்னை காங்கிரஸ் மாநாட்டில் அதனை மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடன் வரவேற்றார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு ஆகியவற்றின் சிறப்புகளை கண்டு வியந்த அவர் , இந்தியாவில் பிரிட்டிஷ் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டமை இந்தியர்களின் நன்மைக்குதான் என்று நம்பினார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுய ஆட்சிக் கருத்துக்களையோ, போராட்டத்தையோ அவர் ஆதரிக்கவில்லை. பிரிட்டீஷாரின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வாய்த்த அவர் படிப்படியாக சுய ஆட்சி வழங்குவர் என எதிர்பார்த்தார்.
இந்திய அரசுப் பணிக்குழுவின் உறுப்பினராக 1912 லிருந்து 1915 வரை பணியாற்றினார். அதன் மூலம் இந்தியர்களுக்கு உயர்பதவி வழங்குவதை ஊக்குவித்தார்.
1912 ல் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு இந்தியர்கள் நிறவெறி காரணமாக இன ஒதுக்கல் செய்யப்பட்டு கொடுமைக்குள்ளாவதை நேரில் கொண்டார். அப்போது அங்கு நடந்த போராட்ட முறைகளைப் பாராட்டிய காந்தியடிகளை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார்.
காந்தியடிகளால் “கங்கை" என மனமுருக பாராட்டப்பட்டவர்.
1915-ல் தமது 49 வயதில் அவர் மரணமடைந்தது இந்திய தேசிய இயக்கத்திற்கு உண்மையிலேயே பேரிழப்பாகும்.