ஜமாபந்தி: வருவாய் தீர்ப்பாயம் (வருவாய்த்துறை
சம்பந்தமான மக்களின் குறைகளை நீக்குதல்)
+
நன்செய்: பாசன வசதி கொண்ட நிலம்
புன்செய்: பாசன வசதி குறைந்த நிலம் அல்லது மழையை நம்பி
விவசாயம் நடைபெறும் நிலம்
குத்தகை:
குறிப்பிட்ட ஒரு நிலத்தை அல்லது
நிலத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தும் உரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மற்றொரு
நபருக்கு அளிப்பது குத்தகையாகும்.
வில்லங்க சான்று:
ஒரு நிலத்தினை பற்றி அறிந்து
கொள்ள அந்த நிலத்தை விலைக்கு வாங்குபவர் பெறும் ஆவணம். இது பதிவு துறையால்
வழங்கப்படுகிறது. இதன் மூலம் மோசடி தடுக்கப்படுகிறது.
கிரயம்: நிலத்தை
ஒருவருக்கு விற்பனை செய்வது.
பட்டா:
குறிப்பிட்ட ஒரு நிலமோ அல்லது
காலி மனையோ யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்த்துறையால்
வழங்கப்படும் ஆவணம். இது புத்தக வடிவிலோ அல்லது சான்றிதழ் வடிவிலோ இருக்கும்.
சிட்டா:
ஒரு நிலத்தின் உரிமையாளரின் பயன்பாட்டில் உள்ள விபரங்கள்
அடங்கிய ஆவணம். இது வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஆவணம்.
அடங்கல்:
ஒரு குறிப்பிட்ட நிலத்தின்
பரப்பு சர்வே எண், பயன்பாடு, அந்த இடத்தின் அமைவிடம் போன்ற விபரங்கள் அடங்கிய
ஆவணம் “அடங்கல்”.
புல எண்: நில அளவை எண்
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பு
சுவாதீனம்: நிலத்தின் மீதான உரிமை
நத்தம் புறம்போக்கு:
அரசுக்கு சொந்தமான இடம் (தனிநபர்
பயன்பாட்டில் இருந்த நிலம், குறிப்பிட்ட ஆண்டுகளாக வரை செலுத்தாவிடில் அந்த நிலம்
புறம்போக்கு என அறிவிக்கப்பட்டு அரசு நிலமாக பதிவு செய்யப்படுகிறது.)
கிராம நத்தம்:
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புக்காக
ஒதுக்கப்பட்ட நிலம்.
கிராம தானம்:
ஒரு கிராமத்தில் பொது
பயன்பாட்டுக்காக (சத்திரங்கள், சுகாதார மையம் போன்றவற்றிற்கு) நிலத்தை ஒதுக்குவது
கிராம தானம் ஆகும்.
தானம்:
நிலத்தை இனாமாக அளிப்பது
தேவதானம்:
கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட
நிலம்.
தேவதாசி இனாம்:
கோவில்களில் பணியாற்றும்
பெண்களுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் (மனைகள்-வீடுகள்)
மகசூல் : விளைச்சல்
அனுபோகம்: பாத்தியதை (உரிமை)
ஆகரமணங்கள்: ஆக்கிரமிப்புகள்
ரயத்: விவசாயி
நமூனா: ரசீது (பதிவுத்துறையால் வழங்கப்படுவது)
பசலி: கிராமக் கணக்குகள் பராமரிக்கப்படும் முறை (பசலி ஆண்டு என
அழைக்கபடுகிறது)
ஆயக்கட்டு: ஒரு பாசன ஆதாரத்திலிருந்து (ஆறு, குளம்,
கால்வாய்) நீர் பெற பதிவு செய்யப்படும்
நிலம்
கிஸ்தி-கெஸ்தி: நிலவரி (வயல், தோட்டம், மானாவாரி
நிலங்களுக்கு செலுத்தப்படும் ஆண்டு வரி)
வாரிசு சான்றிதழ்: குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளர் இறந்து
விட்டாலோ அல்லது 9 ஆண்டுகளுக்கு மேல் எந்த தகவலும் இன்றி காணவில்லை என்றாலோ அந்த
சொத்தின் மீது அவருடைய வாரிசுதாரர்கள் உரிமை கொண்டாட அளிக்கப்படும் ஆவணம்.