மனித செல்கள் அவற்றின் பணிக்கேற்ப, அளவாலும் வடிவத்தாலும் அடிப்படையிலேயே வேறுப்பட்டுள்ளன.
பல்வேறு வடிவங்களுடைய செல்களைப் பற்றி பின்வரும் அட்டவணையில் காண்போம்.


செல்கள் வடிவம்
நரம்பு செல் நட்சத்திரம்
சுடர் செல் குழல்
சுரப்பி செல் கனசதுரம்
தட்டு எபிதீலியம் பல்கோணம்
தூண் எபிதீலியம் உருளை
அண்ட செல் முட்டை
இரத்த செல்கள்வட்டம்
தசை செல்கள், நார் செல்கள்நீள்வடிவம்

மனித செல்களின் பணிகள்
செல்கள் பணிகள்
தட்டு எபிதீலியம் வடிவம் மற்றும் பாதுகாப்பு
தசை செல்கள் சுருங்கி விரிதல்
கொழுப்புச் செல்கள் கொழுப்புகளை சேமித்தல்
நரம்பு செல்கள் நரம்பு தூண்டலைக் கடத்துதல்
எலும்பு செல்கள் உறுதி மற்றும் உடலை தாங்குதல்
கூம்பு மற்றும் குச்சி செல்கள் பார்வை மற்றும் நிறத்தை உணர்தல்
செவியில் உள்ளா நத்தைக்கூடு செல்கள் ஒலி அலைகளை உணர்தல்
சுரப்பிச் செல்கள் சுரத்தல்
செல் நுண்ணுறுப்புகளின் பணிகள்
எண்டோப்ளாஸ்மிக் வலைப்பின்னல்:
1945 ஆம் ஆண்டு போர்ட்டர் என்பவர் இதனை கண்டறிந்தார்.
எண்டோபிளாச வலையில் ரைபோசோம்கள் ஒட்டியிருந்தால் அது சொரசொரப்பான எண்டோபிளாச வலை என்றும், ரைபோசோம்கள் ஒட்டாமல் இருந்தால் வழவழப்பான எண்டோபிளாச வலை என்றும் அழைக்கப்படுகிறது.
எண்டோப்ளாஸ்மிக் வலைப்பின்னல் செல்களுக்கு ஒரு சட்டகம் போன்று அமைந்து உருவத்தினை கொடுக்கிறது.
வழவழப்பான வலைப்பின்னல் கொழுப்புகளை உற்பத்தி செய்யவும் கிளைகோஜனை உடைக்கவும்பயன்படுகிறது.
செல்பிரிதலின் போது மறைந்து போய் ஒவ்வொரு உட்கருபிளவிற்கு பின்னரும் புதிய உட்காரு உறையை தோற்றுவிக்கிறது.
ரைபோசோம்கள்
எண்டோப்ளாஸ்மிக் வலைப்பின்னலில் ஒட்டியிருக்கும் சிறிய கோள வடிவத் துகள்கள் ரைபோசோம் ஆகும்.
இவற்றின் பணி புரத சேர்க்கை ஆகும்.
கோல்கை உறுப்புகள்:
கோல்கை உறுப்புகள் மூன்று விதமான சவ்வமைப்புகளை கொண்டிருக்கும். அவை:
தட்டு வடிவமான, தட்டை பைகள் ,சிறிய நுண்குழல்கள், பெரிய நுண்குமிழ்கள்
நொதிகளை கொண்ட சைமோஜன், துகள் போன்ற சுரக்கும் குழல்களை உருவாக்கும்.
வளரும் ஊசைட்டுகளில் சில மஞ்சள் கருவைஉருவாக்குகின்றன.
விழித்திரையில் விழி நிறமிசெல்களைஉருவாக உதவுகின்றன.
விந்தணுவில் உள்ள அக்ரோசோமை உருவாக்க உதவுகின்றன.
லைசோசோம்கள்
இவை செல்லில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும் ஒருவகை அமைப்பாகும்.
இவை உருண்டை வடிவாமனவை.
செல்லின் உள்ளே வரும் அயல் பொருள்களையும் செல்லின் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுகிறது.
சிதைவடைந்த செல்களை தானே ஜீரணிப்பதால் லைசோசோம்கள்செல்லின் தற்கொலை பைகள்எனப்படும்.
மைட்டோகாண்ட்ரியா:
செல்லின் சைட்டோபிளாசத்தில்இழை, வட்ட அல்லது குச்சி வடிவம் கொண்டு காணப்படும் உறுப்புமைட்டோகாண்ட்ரியா ஆகும்.
மைட்டோகாண்ட்ரியா செல் சுவாசத்தில் பெரும்பங்கு வகித்து சக்தியை உருவாக்கும் ஆற்றல் மையமாக இருப்பதால் இது செல்லின் ஆற்றல் நிலையம்என அழைக்கப்படுகிறது.
சென்ட்ரியோல்கள்:
இவை விலங்குசெல்களில் உட்கருவிற்குஅருகில் நுண்ணிய குழல் வடிவிலோ குச்சி வடிவிலோ காணப்படும்.
இவை செல்பிரிதலின் போது கதிர்இழைநார்களையும், ஆஸ்ட்ரல் உறுப்புகளையும் உருவாக்கி செல் பிரிதலைத் திட்டமிடுகின்றன.
உட்கரு:
உட்கரு, செல்லின் முக்கிய துணை நுண்ணுறுப்பு ஆகும். இது நான்கு பகுதிகளை கொண்டது. அவை: உட்கரு படலம், உட்கரு பிளாசம், குரோமேட்டின் வலைப்பின்னல், உட்கருமணி.
உட்கரு செல்லில் நடைபெறும் அனைத்து வளர்சிதை மாற்றங்களையும் பாரம்பரிய பண்புகளையும் கடத்திக் கட்டுப்படுத்துகிறது.
உட்கருப்படலமானது உட்கருப்பிளாசத்திற்கும் சைட்டோபிளாசத்திற்கும் இடையே அயனிகளின் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
 
Top