பல சமூகங்கள் ஒன்றோடோன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது சமுதாயம் எனப்படும்.

ஒரே வீட்டில் சமைத்து , பகிர்ந்துண்டு வாழும் குழுவிற்கு குடும்பம் என்று பெயர்.

நிம்மதியான வாழ்க்கைக்கு வகை செய்வது சமூகம் .

நம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் உடனுறை சமூகத்தினர் ஆவர். பள்ளி சமுதாய நிறுவனம் ஆகும். பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர் ஆசிரியர்.

சமுதாயத்தினரே பள்ளியின் உரிமையாளர்கள். சமுதாயமே பள்ளிக்கு தேவையான இடப்பரப்பை தந்துள்ளது.

மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்பு .

விவசாயம் முடங்கி வருவதால் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி நகர்ப்பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஊரக-நகரப்பகுதி இடைவெளியை குறைக்க முயல்கின்றன.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் கட்டமைப்பு வசதிகள் வழங்கும் திட்டம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித்  திட்டம். 

பொருளாதாரத்தில்  பின்தங்கியுள்ள தொழிலாளர்களின்  குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம்.

மாநகரங்களை சுற்றிலும்  சுமார் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள பகுதிகளே ஊரக  பகுதிகள்.

கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையில் மாதத்தில் ஒரு நாள் தொலைதூர கிராமம் ஒன்றில் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்கள் தொடர்பு திட்ட நாள் என்று பெயர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் இக்காலத்தில் செயல்படும்  உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர் ரிப்பன் பிரபு.

நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்வதற்கே  உள்ளாட்சி அமைப்புகள் தேவைப்படுகின்றன .

கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடும்.

ஜனவரி – 26

 மே - 1

ஆகஸ்ட் - 15

அக்டோபர்  -  2 ஆகிய தேதிகளில் கூடும்.


 
Top