2017-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சட்.ஹெச்.தாலர் (Richard H.Thaler)க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் உளவியலுடன் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்டு ஹெச்.தாலருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டுக்கு தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.2 கோடி வழங்கப்படும்.

1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. பல்வேறு துறைக்கான நோபல் பரிசு கடந்த
  சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டில் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சட்.ஹெச்.தாலருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


 
Top