தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பை கொண்டவை.
1.
மாவட்டப் பஞ்சாயத்து
2.
ஒன்றியப் பஞ்சாயத்து
3.
கிராமப் பஞ்சாயத்து
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள்:
கிராம சபை என்ற அமைப்பின் மூலம் கிராம நிர்வாகம் நடைப்பெற்றது.
ஒரு கிராமமானது நிர்வாக வசதிக்காக பல வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.
சோழர் காலத்தில் கிராம நிர்வாக முறைகள்
இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமானது உத்திரமேரூர்
கல்வெட்டு ஆகும்.
சோழர் கால மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குடவோலை
முறை மூலம் தாங்களே தேர்வு செய்து கிராம சபைகளுக்கு அனுப்பினர்.
பின்பு இடைக்காலத்தில் கிராம சபைகள் வலுவிழந்தன.
கிராம மக்கள் தங்கள் குறைகளை மன்னருக்கு பதிலாக
ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடும் வழக்கம் தோன்றியது.
ரிப்பன் பிரபு(1880-1886) இந்தியாவின் வைசிராயாக பொறுப்பேற்றார்.இவர்
கிராம நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சீர்ப்படுத்தி தனிச்சட்டம்
இயற்றினார். அதன்படி,
·
கிராமங்கள் மற்றும்
நகரங்களில் ஒன்றியங்கள் ஏற்படுத்தப்பட்டது.
·
கிராமக் குழுக்கள்
ஏற்படுத்தப்பட்டன. இதன் பிரதிநிதிகள் நேரடியாக தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
·
கிராமக் குழுக்களுக்கு தலைவர்
நியமிக்கப்பட்டார்.
·
சாலை, தெருவிளக்கு
மற்றும் சுகாதாரம் போன்ற தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றுவது ஒன்றியங்களின் கடமை
ஆக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் சீர்செய்யப்படுவதற்கு
முன்பே சென்னைக்கு –ல் கார்ப்பரேஷன்
அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை ஆகும்.