கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு சரியான வினாவை தேர்ந்தெடுத்து எழுதுவதே இப்பகுதியாகும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளையும் சற்று கவனத்துடன் படித்து பார்த்தால் எளிதில் விடையளிக்கலாம்.

இங்கு சில உதாரணங்களை பார்ப்போம்:

1. ‘தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.’
a) தமிழில் இலக்கணம் உண்டா?
b) தமிழ்  இலக்கணம் என்றால் என்ன?
c) தமிழ்  இலக்கணம் எத்தனை வகைப்படும்?
d) தமிழ் எத்தனை வகைப்படும்?
விடை: c) தமிழ்  இலக்கணம் எத்தனை வகைப்படும்?


2. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’
a) வாழ்வார் யார்?
b) எல்லோரும் உழ முடியுமா?
c) உண்ண உழைக்க வேண்டுமா?
d) உழுபவர் யார்?
விடை: a) வாழ்வார் யார்?


3. ‘காலில் புண் இருந்தது'
a) கால் எங்கே இருந்தது?
b) காலில் இருந்தது புண்ணா?
c) காலில் புண்ணா இருந்தது?
d) புண் எங்கே இருந்தது?
விடை: d) புண் எங்கே இருந்தது?


4. ‘குமரன் பாடம் படித்தான்’
a) குமரன் பாடம் படித்தான்?
b) குமரன்  என்ன படித்தான்?
c) குமரன் எங்கு படித்தான்?
d) குமரன் ஏன் படித்தான்?
விடை: b) குமரன்  என்ன படித்தான்


5. ‘கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி ஏற்றினான்'
a) கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி ஏற்றினானா?
b) கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான்?
c) கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி ஏற்றினான்?
d) கரிகாலன் இமயத்திலா  புலிக்கொடி ஏற்றினான்'

விடை:b) கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான்?


6.‘வாய்மையே என்றும் வெல்லும்'
a) என்றும் வெல்லக்கூடியது எவை?
b) எது என்றும் வெல்லும்?
c) வெல்லக்கூடியது என்றும் எது?
d) என்றும் எதனை வெல்லும்?
விடை: b) எது என்றும் வெல்லும்?

 
Top