இந்தியாவின் குறுக்கே ஓடும் சிறப்பு அட்சம் எது? கடகரேகை
ஆரவல்லித் தொடரில் அமைந்துள்ள மிக பெரிய சிகரம் எது? மவுண்ட் அபு
தென் இந்தியாவின் மிக நீளமான ஆறு எது? கோதாவரி
கனிமங்கள் அதிகம் காணப்படும் இடம் எது? சோட்டா நாக்பூர்
வடகிழக்கு பருவக்காற்றால் மழை பெரும் பகுதி எது? கிழக்கு கடற்கரை
பருத்தி மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது? மகாராஷ்டிரா
காப்பி மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது? கர்நாடகா
நறுமணப்பயிர்கள் மிளகு, ஏலக்காய் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது? கேரளா
இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
இந்தியாவிலேயே அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
இந்தியாவில் தேயிலை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? அஸ்ஸாம்
இந்தியாவில் சணல் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்
தென் இந்தியாவில் நெல் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
இந்தியாவில் கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கபெறும் டெல்டா பகுதி எது? காவிரி
இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் பள்ளத்தாக்கு எது? தாமோதர் பள்ளத்தாக்கு
மிகுதியாக பாக்சைட் உற்பத்தி செய்யும் மாநிலம் எது? தமிழ்நாடு