தமிழ்நாடு தொழிலாளர் துறையில் 2013-14, 2015-16 மற்றும்
2016-17-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள 10 தொழிலாளர் உதவி ஆணையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நேற்று (ஜன.12) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும்
பிப்ரவரி 11க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commissioner of Labour (Formerly named as
Labour Officer)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக
ரூ.200 செலுத்த வேண்டும். ஏற்கனவே, பதிவுக்கட்டணம்
செலுத்தியவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.02.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: தாள் - 1: 29.04.2018 அன்று
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி
வரையும், தாள் - II 29.04.2018 அன்று
மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி
வரை நடைபெறும்.
கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_01_asst_comm_labour_officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_01_asst_comm_labour_officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.