·
பசு இனங்கள் முக்கியமாக அவை தரும் பாலுக்காக
வளர்க்கப்டுகின்றன. எ.கா: ஜெர்சி
·
ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படும்
விலங்குகள் இழுவை விலங்குகள். எ.கா: எருது,
காளைமாடு (காங்கேயம்), குதிரை, யானை, கழுதை
·
செம்மறியாடு, வெள்ளாடு, லாமா என்ற ஒரு வகை
ஆடுகளின் உரோமங்களிலிருந்து கம்பளி
தயாரிக்கப்படுகிறது
·
பட்டுப்புழுக்களில் இருந்து பட்டு இழை பெறப்படுகிறது.
·
காஷ்மீரில் உள்ள வெள்ளாடு பஸ்மினா. இதன் உரோமங்களில் இருந்து நெய்யப்படும்
மிருதுவான சால்வை பஸ்மினா சால்வைகள்
·
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆட்டில் இருந்து
உரோமத்தை கத்தரிக்க ஒரு புதுமுறையை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு “பயோகிளிப்” என்று பெயர்.
·
பட்டு புழுக்களின் உமிழ்நீர்
சுரப்பிகளில் சுரக்கப்படும் புரதப் பொருளே பட்டு இழையாகும்
·
மல்பெரி பட்டுப்புழுக்களின் இளம் உயிரிக்
கூடுகளில் இருந்து பெறப்படும் பட்டு இழையே மிக சிறந்த பட்டு இழை.
·
பட்டு உற்பத்திக்கென பட்டுப்புழுக்களை
வளர்க்கும் முறைக்கு பட்டுப்புழு வளர்ப்பு
என்று பெயர்.
·
பல்வேறு பட்டு வகைகள்: மல்பெரி பட்டு, டஸார் பட்டு, எரி பட்டு, முகா பட்டு
·
பெண் புழு ஒரே நேரத்தில் நூற்றுகணக்கான முட்டை
இடும். இம்முட்டைகளை சுகாதாரமான சூழ்நிலையில்
உகந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
·
இளம் உயிரிகள் முட்டைகளில் இருந்து வெளிவரும்
போது மல்பெரி எனும் முசுக்கொட்டை இலைகளை
உண்கின்றன.
·
25 முதல் 30 நாள் உண்ட பிறகு இழைகளால்
தன்னை சுற்றி அமைத்து கொள்ளும் அறையே கூடு (கக்கூன்)
எனப்படும்.
·
பட்டுக்கூட்டிலிருந்து இழைகளை பிரித்தெடுக்கும்
முறைக்கு சுருளுதல் என்று பெயர்.
·
மூவகை தேனீக்கள்:
1.
இராணி தேனீ – பெண் தேனீ
2.
டிரோன் – ஆண் தேனீ
3.
வேலைக்காரத் தேனீ – மலட்டுப்பெண்
தேனீ
·
ஒரு தேன் கூட்டில் ஒரே
ஒரு இராணிதேனீ மட்டுமே காணப்படும். முட்டையிடுவதே இராணி தேனீயின்
வேலையாகும்.
·
சில இந்திய வகை தேனீக்கள்:
1.
பாறைத் தேனீ (ஏபிஸ்
டார்சேட்டா)
2.
சிறிய தேனீ (ஏபிஸ்
புளோரியா)
3.
இந்தியத் தேனீ (ஏபிஸ்
இண்டிகா)
·
தேனில் உள்ள கூட்டு பொருள்களின் அளவு:
சர்க்கரை – 75%
நீர் – 17%
தாது உப்புகள் – 8%
·
தேனீ வளர்ப்புக்கு உகந்த இத்தாலிய தேனீ இனம் – ஏபிஸ் மெல்லிபெரா. (இவை அதிக தேனை உற்பத்தி செய்யும்;
கொட்டும் தன்மையும் குறைவு)
·
தேனீ வளர்ப்பு முறைக்கு எபிகல்சர்
(Apiculture) என்று பெயர்.
·
முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் கோழி இனங்கள்
வளர்க்கப்படும் முறை கோழி வளர்ப்பு முறை.
·
கோழி வளர்க்கும் இடங்களுக்கு கோழி பண்ணை என்று
பெயர்
·
தமிழ்நாட்டில் நாமக்கல்
மாவட்டம் கோழிப்பண்ணை தொழிலில் புகழ்பெற்று விளங்குகிறது
·
முட்டைக்காக மட்டும் வளர்க்கப்படும் கோழி
இனங்கள் முட்டையிடும் கோழிகள்
·
இறைச்சிக்காக மட்டும் வளர்க்கப்படும் கோழி
இனங்கள் கறிக்கோழிகள்(பிராய்லர்) எனப்படும்.
·
அடைகாத்து குஞ்சு பொரிக்கும் கோழிகளுக்கு அடைகாக்கும்
கோழிகள் என்று பெயர்
·
அடைகாத்தலுக்கு பிறகு கோழி 21 நாள்களுக்கு பிறகு குஞ்சு
பொரிக்கும்
·
TAPCO என்பது தமிழ்நாடு கோழி வளர்ப்பு துறை
·
முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த
மேற்கொள்ளப்படும் புதிய அறிவியல் நடைமுறைக்கு வெள்ளி
புரட்சி என்று பெயர்.
·
புளுகிராஸ் எனபது
விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.
பராமரிப்பு இல்லாத விலங்குகளுக்கு இருப்பியம் ஏற்படுத்தி தருவதும் பாதுகாப்பை
தருவதும் இதன் நோக்கம்.