1.
உ.வே.சாமிநாதன் அவர்கள் அச்சில்
பதிப்பிற்பதற்காக எழுதிய “குறிஞ்சிப் பாட்டு” சுவடியில் எத்தனை வகையான பூக்களின்
பெயர்கள் இருந்தன? தொண்ணூற்று ஒன்பது
2.
‘கள்’ இறக்குவதனை தடுப்பதற்காக தன்னுடைய
தோப்பிலிருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர் யார்? தந்தை
பெரியார்
3.
“ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை அதனை
புரிந்து கொள்ளவும்,முறையாக வாழவும் புத்தக படிப்பு இன்றியமையாதது”- இது யாருடைய
கடித வரிகள்? ஜவஹர்லால் நேரு
4.
‘பகுத்தறிவு கவிராயர்’ எனத் தமிழக மக்களால்
அழைக்கப்படுபவர்? உடுமலை நாராயண கவி
5.
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது? சிலேடை
6.
திராவிட மொழிகள் மத்திய ஆசியாவில் வழங்கு
சிந்திய மொழியுடன் தொடர்ப்டையதாக இருக்கும் என்று காட்டியவர்? கால்டுவெல்
7.
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலை
தமிழில் மொழிபெயர்த்தவர்கள் யாவர்? கா.கோவிந்தன்
& க.ரத்தன்
8.
பதிற்றுப்பத்து நூலினை முதன்முதலில்
பதிப்பித்தவர் யார்? உ. வே.சாமிநாத ஐயர்
9.
முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ
சமயத்திற்கு மாற்றியவர் யார்? திருநாவுக்கரசர்
10. “குழவி
மருங்கினும் கிழவதாகும்” என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்பெறும் இலக்கியம்
எது? பிள்ளைத்தமிழ்