முதல் அட்டவணை:
28 மாநிலங்களையும் 7யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது.
2 வது அட்டவணை:
குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மைய, மாநில சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், மாநிலங்களவை தலைவர், மாநில சட்ட மேலவையின் அவை தலைவர், துணை தலைவர், தலைமை தணிக்கையாளர் ஆகியோரின் ஊதியங்கள் , படிகள் அளிப்பது பற்றியது.
3 வது அட்டவணை:
மத்திய/ மாநில அமைச்சர்கள பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், தலைமை தணிக்கையாளர், மாநில அமைச்சர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் இதில் அடங்கும்.
4 வது அட்டவணை:
மாநிலங்களவை இடஒதுக்கீடு - ஒவ்வொரு மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய இடங்கள் பற்றியது.
5 வது அட்டவணை:
அஸ்ஸாம், மேகாலயா, மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழுகின்ற பகுதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் அடங்கியது
6 வது அட்டவணை:
அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் பற்றியது
7வது அட்டவணை:
மைய அரசின் நேரடிப் பார்வையின் கீழ் உள்ள அதிகாரங்கள், அதிகார வரம்பு உரிமைகள், சட்டங்கள் பற்றிய 99 வகையான பிரிவுகளின் பட்டியலும் மாநில பட்டியலில் 66 பிரிவுகளையும் மத்திய மாநில அரசுகளுக்கான பொதுவான 51 பிரிவுகளையும் உள்ளடக்கியது.
8 வது அட்டவணை:
இந்திய நாட்டின் அரசியலமைப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளின் பட்டியலாகும்.
இந்தி
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
வங்காளி
அஸ்ஸாமி
மராத்தி
ஒரியா
பஞ்சாபி
சமஸ்கிருதம்
குஜராத்தி
காஷ்மீரி
உருது
கொங்கணி
மணிப்புரி
நேபாளி
மலையாளம்
போடா
டோக்ரி
மைதிலி
சந்தாலி
9 வது அட்டவணை:
நில உச்ச வரம்பு, நில வரி, இரயில்வே துறை, தொழில் துறை பற்றிய சட்ட திருத்தங்கள் மற்றும் அவ்வபோது மத்திய ,மாநில அரசுகளால் இடப்படும் ஆணைகளும் அடங்கியது.
10 வது அட்டவணை:
கட்சி தாவலினால் உறுப்பினர்கள் பதவி இழக்கும் விதிமுறைகள் பற்றியது.
11 வது அட்டவணை:
இந்தியாவிலுள்ள பஞ்சாயத்து ஆட்சிமுறைகள் பற்றிய விளக்கங்கள் அடங்கியது.
12வது அட்டவணை:
இது மூன்று வகையான நகராட்சிகள் பற்றியது. நகர் பஞ்சாயத்துக்கள், சிறிய நகரங்களுக்கான நகராட்சி சபைகள், பெரிய அளவிலான மாநகராட்சிகளின் செயல்பாடுகள், அதிகாரங்கள் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன.