இயற்பெயர் தேவநேசன்
காலம் 07.02.1902- 16.01.1981
பெற்றோர் ஞானமுத்து - பரிபூரணம்
ஊர் பெரும்புதூர், நெல்லை மாவட்டம்
சிறப்பு பெயர்கள் மொழிஞாயிறு,
எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா
  

படிப்பு:

திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் இருந்த கிறித்துவ நடுநிலைப்பள்ளியில் பயின்றார்..

இராமநாதபுரம் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த சியோன் மலை என்னும் முறம்பில் வசித்து வந்த யங் துறை என்பவரின் உதவியோடு பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு  பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பார்களாம்.

பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார்.

அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளரான பாவாணர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.

ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே என்று காட்டிய மொழிப் பேரறிஞர்.

ஆற்றிய பணிகள்:

1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.

தனது 17 ஆம் வயதில் உயர்நிலைக் கல்வி பயின்றவுடன் தான் பயின்ற சீயோன் மலை உயர்நிலைப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1921-ஆம் ஆண்டு மீண்டும் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.

அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

ஆம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில், சென்னை திருவல்லிக்கேணி, தாம்பரம் ஆகிய இடங்களில் வித்துவான் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1940 –இல்  திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.

1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது. "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.

1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். இதிலும் அவர் ஒருவரே வெற்றி பெற்றார்.

பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார்.

எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதற்கு காரணம் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.

பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வாராளராகவும் பணியை தொடங்கினார்.

1974 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்கத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.    

பாவாணரின் கொள்கை:

- உலக முதன் மொழி தமிழ்

- உலக முதல் மாந்தன் தமிழன்

- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்

தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.

விருதுகளும் பட்டங்களும்

மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - 12.1.64 அன்று 'தமிழ்ப்பெருங்காவலர்' விருது வழங்கியது.

குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.

தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.

சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்,

மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர்,

திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் என்னும் மூன்று பட்டங்களைப் பெற்றார்..

எழுதிய நூல்கள்:

இசைக் கலம்பகம்

இயற்றமிழ் இலக்கணம்

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்

ஒப்பியன் மொழி நூல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

தமிழர் திருமணம்

திராவிடத் தாய்

பழந்தமிழாராய்ச்சி

இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

 
Top