பிறந்த தேதி | 22.05.1772 |
பிறந்த ஊர் | இராதா நகர், வங்காளம் |
சிறப்பு பெயர்கள் | நவீன இந்தியாவின் விடிவெள்ளி புதிய ஆன்மீகக்கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை |
இராஜாராம் மோகன்ராய் சீர்திருத்தவாதியாய், கல்வியாளராய், சமய நிறுவனராக திகழ்ந்தார்.
ஒரே கடவுள் கோட்பாட்டினரான ராஜாராம் இந்தியாவையும் இந்தியரையும் தூய்மைப்படுத்துவதையே தன நோக்கமாக கொண்டார்.
சமூக சீர்திருத்தம்
சாதிக் கொடுமைகள், அறியாமை, மூட நம்பிக்கை, பெண் இனப்புறக்கணிப்பு போன்ற சமூக கொடுமைகளை எதிர்த்து போரிட்டார்.
1811-ல் தன்னுடைய சகோதரரின் மனைவி உடன்கட்டை ஏறினமையால் அதனை ஒழிக்க உறுதி பூண்டார்.
ராஜாராமின் துணை காரணமாகவே 1829-ல் வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஏறுவதை சட்டப்பூர்வமாகத் தடை செய்தார்.
அரபி, பாரசீகம், வங்காளி, சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
மேனாட்டு கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
பெண்க் கல்வியின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.
கல்கத்தாவில் ஆங்கில பள்ளி ஒன்றினையும் நடத்தினார்.
1813- ல் மேனாட்டுக் கல்விக்கென பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அவரும் காரணமாயிருந்தார்.
1817-ல் இந்து கல்லூரியை நிறுவ டேவிட் ஹரே என்பவருக்கு உதவினார்.
சம்வத்கௌமதி என்ற வங்க மொழி செய்தித்தாளை 1821-ல் வெளியிட்டார்.
1822 -ல் மிராத்-உல்-அக்பர் என்ற வார இதழை பாரசீக மொழியில் வெளியிட்டார்.
1825 -ல் வேதாந்த கல்லூரியையும் நிறுவினார்.
பலதார மணத்தை சாடினார்.
பெண்களுக்கு சொத்துரிமையை வலியுறுத்தினார்.
சமயசீர்திருத்தம்
ஒரே கடவுள் கோட்பாட்டினர்.
சமயப் பிரிவினரின் சமயச்சடங்குகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் சாடினார்.
வேதாந்தம் என்பது காரணங்கள் சார்பாக எழுந்ததென்றார்.
உருவ வழிப்பாட்டினை கண்டித்தார்.
1815-ல் கல்கத்தாவில் ஆத்மீய சபா என்ற அமைப்பை உருவாக்கினார்.
1828 -ல் பிற்காலத்தில் பிரம்மசமாஜ் எனப்பட்ட பிரம்மா சபா என்ற அமைப்பை உருவாக்கினார்.
பிரம்மா சபாவின் கொள்கைகள்
ஒன்றே கடவுள்; ஒருவனே தேவன்.
வேதங்களின் உட்பொருளை அது எடுத்தியம்பியது.
வேதங்கள், உபநிடதங்களின் கருத்துகள் வெளியிடப்பட்டன.
மானிட இனத்தின் பெருமையை நிலைநாட்டுவதில் இறையருள் வெளிப்படுத்தப்பட்டது.
அரசியல் கோட்பாடு
முதன் முறையாக இந்துக்கள் மனத்தில் தேசீயம் என்ற வித்தினை ஊன்றினார்.
சாதிகளை ஒழித்து இந்தியர் ஒற்றுமையாய் வாழவேண்டுமென்றார்.
ஜமீன்தாரர்களின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை சாடினார்.
விவசாயிகளிடமிருந்து பெறக் கூடிய தீர்வை தீர்மானிக்கப்பட வேண்டுமென்றார்.
நிலவரியைக் குறைப்பதை வலியுறுத்தினார்.
இந்தியமயமாக்கல் என்ற கோட்பாட்டில் பற்றுடையவராயிருந்த ராஜாராம் மோகன்ராய் நீதித்துறையிலும், பணிக்கமர்த்துவதிலும் ஐரோப்பியருக்கும் இந்தியருக்குமிடையில் காணப்பட்ட வேற்றுமைகளை வெறுத்தார்.
1833-ல் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் இராஜாராம் மரணமடைந்தார்.