செவிகள் ஒலியை உணர மட்டுமல்லாது நாம் கீழே விழாதப்படி நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கு தேவையான சமநிலை உணர்வினை  நமக்கு அளிக்கின்றன.
ஒலி என்பது வெளிப்புறச் சூழலின் நீள் அதிர்வினால் ஏற்படும் உணர்வாகும்.
மனிதரால் கேட்கக்கூடிய ஒலி 20 – 20,000 ஹெர்ட்ஸ்.
ஒலியின் அடர்வினை அளப்பதற்கு டெசிபெல் (db) என்ற அலகு பய ன்படுத்தப்படுகிறது.
செவியின் மூன்று பகுதிகள் : புறச்செவி, நடுச்செவி, உட்செவி.
ஒலி அலைகள் புறச்செவி புறவழி மற்றும் புறச்செவி குழாய் வழியாக செவிப்பறையை அடைகின்றது. இதனால் செவிப்பறை அதிர்கின்றது.
நடுச்செவி என்பது டெம்போரல் எலும்பில் அமைந்துள்ள காற்று நிரம்பிய குழிவான பகுதியாகும்..
நடுச்செவியின் மூன்று செவிக் குருத்தெலும்புகள் மால்லியஸ், ஸ்டேப்பிஸ், இன்கஸ்.
மால்லியஸ் செவிப்பறையுடனும், ஸ்டேப்பிஸ் நீள்வட்ட பலகணியுடனும், இன்கஸ் இவ்விரு எலும்புகளுடனும் இணைந்துள்ளது.
உட்செவி காக்லியா மற்றும் வெஸ்டிபியூல் ஆகியவற்றால் ஆனது.
காக்லியா பகுதி 2.75 சுற்றுகள் கொண்ட குழாய்  போன்ற அமைப்புடையது.
அதன் நீளம் முழுவதும் பேசிலார் மற்றும் ரெயிஸ்னர் சவ்வினால் மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
காக்லியாவின் நடு அறையில் ஸ்கேலா மீடியா ன்ற உள்திரவமும், மற்ற இரு அறைகளிலும் ஸ்கேலா வெஸ்டிபுலை , ஸ்கேலா டிம்பனை என்கிற சுற்று திரவமும் உள்ளது.
பேசிலார் சவ்வில் கேள் உணர்திறன் கொண்ட  கார்டை உறுப்பு அமைந்துள்ளது.
ஒலி உணர் பாதை:
ஒலி அலைகள் - செவிப்பறை அதிர்வடைதல் - காது எலும்புகளின் அசைவுகள் - நீள்வட்டப் பலகணி அதிர்வு - சூழ்திரவ அலைகள் - உள்திரவ அலைகள் - ரெயிஸ்னர் சவ்வில் வளைவு- பேசிலார்  சவ்வில் ஏற்படும் மாற்றம் - மயிர்ச் செல்களின் வளைவு - வினைமாற்ற நிகழ்வு - செவி நரம்பின் மூலம் கடத்தல்.
காதுகேளாத் தன்மையின் வகைகள்:
  • கடத்தல் வகை
  • உணர்தல் வகை
  • கலப்புக் கடத்தல் வகை
  • நரம்பு கோளாறுகள்
முழுமையாக குணப்படுத்த முடியாத நிலையிலுள்ள காது கேளாதவர்களுக்கு மின்னணு கருவியான  கேள் உதவி கருவி பயன்படும்.
இந்திய தொழிற்சாலை இரைச்சல் அளவீட்டின் படி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு 81dB 120dB வரை ஆகும்.
130dB க்கு மேல் உள்ள கனத்த சத்தமானது  நிலையான சேதத்தையோ கேட்டல் தன்மையினை குறைவடையவோ செய்கிறது.
 
Top