தமிழில் மொத்தம் 246 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு.
Click here to download TNPSC MASTER Android app
42 எழுத்துக்களுக்குரிய பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும்.
நன்னூல் எழுத்ததிகாரம்:
எழுத்தே தனித்தும், தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்.
பதம், மொழி, சொல் - ஒரு பொருளை உடையது. ஓர் எழுத்து ஒரு மொழி நாற்பத்து இரண்டு.
உயிர் ம வில் ஆறும் த,ப, ந வில் ஐந்தும், க,வ,ச வில் நாலும் ய வ்வில் ஒன்றும் ஆகும். நெடில் நொ, து, ஆங்குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின.

நன்னூல் – சூத்திரம் (129)
ஓரெழுத்துகள்
|
பொருள்
|
ஆ | பசு |
ஈ | பறக்கும் பூச்சி |
ஊ | இறைச்சி |
ஏ | அம்பு |
ஐ | அழகு, தலைவன் |
க | அரசன், காற்று, கதிரவன், பறவை, முகில் |
கா | சோலை |
கூ | பூமி |
கை | உறுப்பு |
கோ | அரசன், தலைவன், |
சா | இறப்பு |
சீ | இகழ்ச்சி, வெறுப்பு |
சே | எருது |
சோ | அரண் |
தா | கொடு |
தீ | நெருப்பு |
தூ | வெண்மை |
தே | தெய்வம் |
தை | தமிழ் மாதம் |
நா | நாக்கு, திறப்பு, மணி |
நீ | நீ |
நை | வருந்து |
நோ | நோய், துன்பம் |
பா | அழகு, பாட்டு |
பூ | மலர் |
பே | அச்சம் |
பை | கைப்பை |
போ | செல் |
மா | பெரிய |
மீ | மேலே |
மூ | மூப்பு, மூன்று |
மே | மேல் |
மை | கண்மை |
மோ | முகர்தல் |
யா | ஒருவகை மரம் |
வா | வருகை |
வீ | மலர் |
வை | வைத்தல் |
வௌ | கைப்பற்றுதல் |