1. மாநிலங்களின் மொழியைப் பற்றிக் கூறும் விதிகள்:
அ)விதிகள் 354 முதல் 374 ஆ)விதிகள் 342 முதல் 362
இ) விதிகள் 345 முதல் 347 ஈ) இவை எதுவுமில்லை

2.சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளைப் பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது?
அ)பிரதம அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
ஆ)அமைச்சரவைக்கும், நீதிமன்றத்திற்கும்
இ)சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும்
ஈ) மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்.

3. நுகர்வோர் நீதிமன்றங்களில்
அ)வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
ஆ) எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
இ) எழுத்து மூலமான விவாதத்திற்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு.
ஈ) இவை அனைத்தும்

4. தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் மக்களவைக்குஅனுப்பப்படுகிறார்கள்
அ) 36 உறுப்பினர்கள் ஆ) 37 உறுப்பினர்கள்
இ) 38 உறுப்பினர்கள் ஈ) 39 உறுப்பினர்கள்

5. யார் அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தம்செய்வது?
அ) குடியரசுத் தலைவர் ஆ)உச்சநீதிமன்றம்
இ) பாராளுமன்றம் ஈ) இவை ஏதுமில்லை

6. மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி
அ) வருவாய்ப் பணி ஆ) சட்டம் ஒழுங்கைக் காப்பது
இ) வளர்ச்சிப் பணிகள் ஈ) இவை அனைத்தும்

7. உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள் செயல்படுவது
அ) 1980-லிருந்து ஆ)மிகப் பழங்காலத்திலிருந்து
இ) 1890-லிருந்து ஈ) 1687-லிருந்து

8.மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள எந்த ஒரு பொருளைப் பற்றியும்பாராளுமன்றம் சட்டமியற்றலாம்?
அ)உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
ஆ) இந்திய ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
இ) தேசநலன் கருதி பாராளுமன்றம் மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள பொருள் பற்றிசட்டம் இயற்றலாம் என்று ராஜ்ய சபாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்குஉறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினால்
ஈ) இவை ஏதுமில்லை

9. ,.ஜி.ஆர். எந்த வருடத்தில் தி.மு..விலிருந்து நீக்கப்பட்டார்?
அ) 1967-ல் ஆ) 1969-ல் இ) 1972-ல் ஈ) 1977-ல்

10.விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
அ) இந்து திருமணச்சட்டம் ஆ) தடைச்சட்டம்
இ) ஒழுக்கமற்ற நடமாடுதல் அடக்குமுறைச்சட்டம்
ஈ) வாரிசுச்சட்டம்

11.பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
அ) ஆலய நுழைவு ஆ) தீண்டாமை ஒழிப்புச்சட்டம்
இ) அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஈ) கல்வி

12. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
அ) நவம்பர் 26, 1949 ஆ) ஜனவரி 26, 1950
இ) ஆகஸ்டு 14, 1947 ஈ) இவை ஏதுமில்லை

13. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
அ) சொத்துரிமை ஆ) மத சுதந்திர உரிமை
இ) பேச்சு சுதந்திர உரிமை ஈ) சமத்துவ உரிமை

14. வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்
அ) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
ஆ) ஒப்பந்தம் செய்ய முடியாது இ) ஒப்பந்தம் செய்ய முடியும்
ஈ) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது

15. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
அ) பொதுக்கணக்குக் குழு ஆ) மதிப்பீட்டுக் குழு
இ) பொதுத்துறைக் குழுக்கள் ஈ) மனுக்குழு

16.ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
அ) 2 உறுப்பினர்கள் ஆ) 9 உறுப்பினர்கள்
இ)12 உறுப்பினர்கள் ஈ) 20 உறுப்பினர்கள்

17. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 2004 ஆ) 2000 இ) 2001 ஈ) 2002

18. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
அ) விதி 356 ஆ) விதி 360 இ) விதி 352 ஈ) விதி 350

19. கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநிலஅரசுகள் சட்டமியற்றலாம்?
அ) மாநிலப்பட்டியல் ஆ)மத்தியப்பட்டியல்
இ) பொதுப்பட்டியல் ஈ) இவை அனைத்தும்

20. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்என்ற கருத்து வலுப்பெற்றது.
அ) ஜம்மு- காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
ஆ) லால்பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு
இ) சுவரன் சிங்கின் ராஜினமாவிற்குப் பிறகு
ஈ) பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பிறகு.

21.அரசாங்கத்தில் பங்கு பெற் முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்றமுயற்சிக்கும் அமைப்பு
அ) தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
ஆ) அழுத்தக் குழுக்கள் இ) அரசாங்கம் சார அமைப்புகள்
ஈ) அரசியல் கட்சிகள்

22. தமிழ்நாட்டில் ...தி.மு.. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
அ) 1972 ஆ) 1977 இ) 1982 ஈ) 1984
23. இரண்டு மதத்தினைஸ்சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படிதிருமணம் செய்து கொள்ளலாம்.
அ) இந்து திருமணச்சட்டம் ஆ) சிறப்புத் திருமணச்சட்டம்
இ) கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஈ) முகமதிய திருமணச்சட்டம்

24. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
அ) ஒரே சட்டமன்றம் ஆ) அதிகாரப் பங்கீடு
இ) நீதி மறு ஆய்வு ஈ) அதிகாரப் பிரிவினை

25. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கியநோக்கம்
அ) ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
ஆ) தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
இ) நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
ஈ) பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க

26. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்
அ) மக்களவை சபாநயகர் ஆ) பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
இ) இந்தியத் தலைமை நீதிபதி ஈ) இந்தியத் தேர்தல் ஆணையம்

27. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம்ஒதுக்கப்படுகிறது?
அ) சமமான பிரதிநிதித்துவம் ஆ) மக்கள் தொகையின் அடிப்படையில்
இ) மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை ஈ) தற்போதைய பொருளாதாரநிலையைப் பொருத்து

28. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு
அ) 1950 ஆ) 1951 இ)1952 ஈ)1953

29. தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
அ) 545 உறுப்பினர்கள் ஆ) 555 உறுப்பினர்கள்
இ) 565 உறுப்பினர்கள் ஈ) 575 உறுப்பினர்கள்

30. மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவது
அ) ஏப்ரல் 10ம் தேதி ஆ) ஜூன் 10ம் தேதி
இ) செப்டம்பர் 10ம் தேதி ஈ) டிசம்பர் 10ம் தேதி

31. இந்திய ஜனாதிபதி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ்நிதிக்குழுவை நியமிக்கிறார்?
அ) பிரிவு 320 ஆ) பிரிவு 280 இ) பிரிவு 356 ஈ) பிரிவு 325

32. மாநிலத் தொழில் நீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது?
அ) உச்சநீதிமன்ற நீதிபதி ஆ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இ) உயர்நீதிமன்ற நீதிபதி ஈ) மாவட்ட செஷன்ஸ் நீதிபதி

33. பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ளகுறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

                               பட்டியல்  I                                  பட்டியல்  II

அ) குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம்           A.Article 56
ஆ) குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்                    B.Article 55
இ) குடியரசுத் தலைவரின் தேர்தல்                                  C.Article 61
ஈ) குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்                              D.Article 53
குறியீடுகள்:
அ) A-4, B-1, C- 2, D-3
ஆ) A-4, B-2, C- 1, D-2
இ) A-4, B-1, C- 2, D-3
ஈ) A-4, B-1, C- 3, D-2

34. பின்வருவனவற்றை வரிசைக் கிரமமாகக் கொண்டு வரவும்.
A) CBI, ESMA, SSC, CAT
B) ESMA, CBI, CAT, SSC
C) CAT, SSC, ESMA, CBI
D) CBI, CAT, SSC, ESMA

35. தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்
அ)12 ஆ) 14 இ) 16 ஈ)18

விடைகள்:
1)இ, 2)ஈ, 3)இ, 4)ஈ, 5)இ, 6)ஈ, 7)ஆ, 8)இ, 9)இ, 10)இ, 11)ஆ, 12)அ, 13)அ, 14)அ, 15)ஆ, 16)இ, 17)ஈ, 18)ஆ, 19)இ, 20)அ, 21)ஆ, 22)ஆ, 23)ஆ, 24)ஆ, 25)ஆ, 26)ஈ, 27)ஆ, 28)ஆ, 29)அ, 30)ஈ, 31)ஆ, 32)இ, 33)அ, 34)அ, 35)ஈ

 
Top