திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள்
முப்பால் உத்தரவேதம் ,தெய்வநூல்,பொய்யாமொழி,வாயுறை வாழ்த்து,தமிழ்மறை,பொதுமறை,திருவள்ளுவப்பயன்,திருவள்ளுவம், ஆகிய பல பெயர்களும் திருக்குறளுக்கு உண்டு.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு பல பெயர்கள் உள்ளன அவை: வள்ளுவனாயானர்,தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர்,நான்முகன்,மாதானுபங்கி,செந்நாப்போதார்,பெருநாவலர்,பொய்யில் புலவன் போன்ற பெயர்களும் உண்டு.
திருக்குறளின் மொத்த அதிகாரங்கள் 133.மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1330 .அனைத்தும் குறள்வெண்பா.
அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் ,பொருட்பால் 70 அதிகாரங்களையும் காமத்துப்பால் 25 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
பதினெண்கீழ்க்கணக்கு கீழ்கணக்கு நூல்களில் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் செய்யுளார் (பாவால்) பெயர்பெற்ற ஒரே நூல் திருக்குறள்.
திருக்குறள் அ'கரத்தில் தொடக்கி ந'கரத்தில் முடிகிறது.
திருக்குறளின் சிறப்பை கூறும் நூல் திருவள்ளுவமாலை.
திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்.