பஞ்சாப் சிங்கம்”  என்று போற்றப்பெறும்  லாலா லஜபதிராய் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்லாது இந்திய சமூக சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் ஆர்வம் காட்டினார்.

 1865 ல் லூதியானாவில் பிறந்த அவர் பெரும் சிரமங்களுக்கிடையே சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன வாழ்கையை தொடங்கினார்.

முதலில் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். எனினும் ஆரிய சமாஜம் அவரை அதிகம் கவர்ந்தது.

வேத காலத்து புனித எளிய இந்து சமயத்தை புதுப்பிப்பதை நோக்கமாக கொண்ட அவ்வியக்கத்தோடு தம் வாழ்நாள் முழுவதும் தொடர்பு கொண்டிருந்தார்.

அவ்வியக்கத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். லாஹூரில் D. A. V. கல்லூரி நிறுவப்படுவதற்கு ஒத்துழைப்பளித்தார்.

காங்கிரசில் லஜபதிராய் :

1888ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக கலந்து கொண்டார்.

அதன் பிறகு தொடர்ந்து காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டாலும் அவற்றில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

அம்மாநாடுகளை “கல்வி கற்ற இந்தியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் தேசிய திருவிழாவாக “ கருதினார். அதில் கலந்து கொண்டவர்களை “ விடுமுறை நாள் தேசபக்தர்கள்" என்றே கருதினார்.

தீவிரவாதியாக லஜபதிராய் :

வாங்க பிரிவினையால் நாடெங்கும் மூண்ட தீவிரவாதம் பஞ்சாபில் பரவ அவர் பெரிதும் காரணமாயிருந்தார்.

1907ல் அரசு அவரைக் கைது செய்து மண்டேலாக்கு நாடு கடத்தியது. இக்கொடிய தண்டனையை நாடே எதிர்த்து. எனவே ஆறே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் லஜபதிராய் :

1905ல் இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆதரவான கருத்தை ஏற்படுத்த இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் ஐவரும் ஒரு உறுப்பினராயிருந்தார். எனியும் அந்த முயற்சி அவருக்கு அவருக்கு மனநிறைவளிக்கவில்லை.

மீண்டும் 1913ல் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவிக்க இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்ட குழுவிலும் இடம் பெற்றார்.

இங்கிலாந்து சென்றபோது முதல் உலக போர் தொடங்கிவிட்டது. அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு இந்தியாவின் உண்மை நிலையை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பலவற்றை வெளியிட்டார்.

சுய ஆட்சி இயக்கத்திற்கு ஆதரவான அமைப்பு ஒன்றையும் தொடங்கினார்.

நியூயார்க்கில் இந்திய தகவல் நிலையம் ஒன்றையும் தொடங்கினார்.

அவர் எழுதிய Unhappy India என்ற நூல் ஆங்கில ஆட்சியினரால் இன்னலுற்ற இந்திய மக்களின் நிலையை படம் பிடித்து காட்டியது.

ஒத்துழையாமை இயக்கத்தில் லஜபதிராய் :

தொடக்கத்தில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லையாயினும் நாளடைவில் அதில் அதிக ஈடுபாடு கொண்டார்.

1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

பஞ்சாபில் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார். அதன் காரணமாக 18 மாத சிறை தண்டனை பெற்றார்.

சுயராஜ்யக் கட்சியில் லஜபதிராய் :

செளரி சௌரா நிகழ்ச்சி காரணமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் சி. ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தொடங்கிய சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார்.

அக்கட்சி ஆதரவில் தேர்தலில் போட்டியிட்டு மத்திய சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் விரைவில் அக்கட்சியினரின் செயல்பாடுகளில் வெறுப்படைந்து வெளியேறினார்.

முஸ்லிம் வகுப்புவாதம் பற்றி லஜபதிராய்:

ஆரிய சமாஜ நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிய லஜபதிராய் பிற சமயத்தினருடன் இணக்கமாக போக வேண்டும் என விரும்பினார்.

இது பிற சமூக முன்னேற்றத்துக்கு எதிரானதல்ல என்றும் அவற்றின் முன்னேற்றங்களை எந்த விதத்திலும் தடை செய்யாது என்றும் கருதினார்.

சர். சையது அஹமதுகானின் வகுப்புவாத கண்ணோட்டத்தை கண்டித்து செய்தித்தாட்களில் பகிரங்ககடிதங்கள் எழுதினார்.

முஸ்லீம்களுக்கு தனித்தொகுதியளிப்பதை கண்டித்தார்.

அதே சமயம் அவர்களது வகுப்புவாதத்தை தாஜா செய்ய முயன்ற தேசிய தலைவர்களையும் கண்டித்தார்.

பண்டிதமதன் மோகன் மாளவியாவுடன் இணைந்து இந்து சங்கத்தின் இயக்கத்தைத் தொடங்கினார்.

1925 ல் இந்து மகாசபை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அச்சபை இந்துக்களின் சமூக பொருளியல் சிக்கல்களை தீர்க்கப்பாடுபட வேண்டுமேயன்றி அரசியல் பிரச்சினைகளையல்ல என்று வலியுறுத்தினார்.

சைமன் குழு எதிர்ப்பில் லஜபதிராய் :

1928 ல் சைமன் குழு லாகூருக்கு வருகை புரிந்த போது அதனை எதிர்த்து நடத்தப்பட்ட கருப்புகொடி ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

அப்போது போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் அவர் மீது தடியடி  நடத்தினார்.

அதில் கடுமையான காயங்கள் அடைந்த லஜபதிராய் மருத்துவமனையில் 1928 நவம்பர் 17ல் மரணமடைந்தார்.

 
Top