பிரம்ம ஞான சபைத் தலைவராக 1893ல் இந்திய வந்த அயர்லாந்து பெண்மணியான அன்னிபெசன்ட் இந்து ஆன்மீக இறையியல் தத்துவங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

இந்தியாவையே தம் தாயகமாகக் கொண்டார். பெனரசில் மத்திய இந்து கல்லூரியை நிறுவினார். அது  தேசிய கல்வியின் மையமாக வளர்ச்சியுற்றது.

சுமார் இருபது ஆண்டுகள் இந்து ஆன்மீக மறுமலர்ச்சிக்காக பாடுப்பட்ட அவர் 1914ல் இந்திய அரசியல் மறுமலர்ச்சி கருதி அரசியலில் ஈடுபட்டார்.

அடக்கு முறை அதிகரிப்பு, உரிமை ஒடுக்கபடுதல், மாணவர்கள் துன்புறுத்தப்படுதல், புரட்சி அபாயம்” ஆகியவை தாம் தம்மை அரசியலில்  ஈடுபட செய்ததாக கூறினார்.

1914ல் உலக போர் தொடங்கிய போது அவர் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். “இங்கிலாந்தின் தேவை , இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு"என்று அறிவித்தார். போர் காலத்தில் இந்தியாவின் உதவி இங்கிலாந்திற்கு தேவைப்படும். அந்த வாய்ப்பை கொண்டு இந்தியா சுய ஆட்சி பெற முயலவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

1914ல் அவர் முறைப்படி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அக்கட்சிக்கு புத்துயிரூட்டி அதனை தீவிர தேசிய இயக்கமாக மாற்ற முயன்றார்.

1907ல்  சூரத் பிளவிற்கு பின் காங்கிரசை விட்டு விலக்கப்பட்ட திலகர் போன்ற தீவிரவாதிகளை மீண்டும் காங்கிரசில் சேர்த்தார்.

1916ல் லக்னௌ காங்கிரசில் முஸ்லீம் லீக் கட்சியோடு பொது உடன்படிக்கை காணக் காரணமாயிருந்தார்.

பிற டோமினியன்களின் மாதிரியில் இந்தியாவில் சுய ஆட்சி ஏற்பட வேண்டும் என முடிவு செய்து அதற்காக 1916ல் சுய ஆட்சி கழகத்தை நிறுவினார். தம் கொள்கைகளைப் பரப்ப இரு ஆங்கில செய்தித்தாட்களை தொடங்கினார் அவை

1. காமன்வீல் - வார இதழ்

2. நியூ இந்திய – தினசரி

நாடெங்கும் சுற்று பயணம் செய்து 200 சுய ஆட்சி சின்னக் கழகங்களை நிறுவினார்.

அன்னிபெசன்டின் சுய ஆட்சி பிரச்சாரம் தேசிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

1917ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1918ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை கடுமையாக கண்டனம் செய்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்திய அமைச்சர் மாண்டேகுவை சந்தித்து சம்பவம் பற்றி விசாரணைக்குழு நிறுவுமாறு வற்புறுத்தினார்.

ஆனால் 1920ல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய பொது அதனை எதிர்த்து காங்கிரசிலிருந்து விலகினர்.

 
Top