மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரியில் 1856 ல் பிறந்தார்.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை “ என்ற புதியதொரு நோக்கத்தை இந்திய தேசிய இயக்கத்திற்கு அளித்த திலகர் , தீவிரவாதிகளின் தலைவராக திகழ்ந்தார்.
1879-ல் சட்டக் கல்வி தேறினார்.
கல்விப்பணி:
நாட்டுப்பற்றையும் ஆன்மீக வலிமையையும் ஏற்படுத்தவல்ல நவீன கல்வி நிறுவனங்களை நிறுவினார். 1890-ல் பூனாவில் அவர் நிறுவிய புதிய ஆங்கில பள்ளி அதற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு. தக்காண கல்வி சங்கம் நிறுவப்பட ஒத்துழைப்பு அளித்தார். ஆதலால் பூனாவில் பெர்கூசன் கல்லூரி நிறுவப்பட்டது.
செய்தித்தாள்பணி :
நாட்டில் தன் கருத்துக்களைப் பரப்புவதற்கு இரு செய்தித் தாட்களை தொடங்கினார். அவை
கேசரி- மராத்தா மொழி செய்தித்தாள்
மராத்தா - ஆங்கில மொழி செய்தித்தாள்
ஆன்மீகப்பணி:
இந்திய ஆன்மீகப் பண்பாட்டு பாரம்பரியங்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் புதுப்பிப்பதில்தான் இந்திய தேசிய மறுமலர்ச்சி அடங்கியிருக்கிறது என்று எண்ணினார்.
பகவத்கீதை விளக்கம்:
பகவத்கீதையின் ஆன்மீக அரசியல் தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட அவர், சொற்பொழிவுகள் செய்தித்தாள்,கட்டுரை மூலம் பகவத்கீதை கருத்துகளை பரப்பினார். அவர் மண்டலே சிறையிலிருந்தபோது “கீதா இரகசியம்" என்ற நூலை எழுதியது குறிப்பிடத்தக்கது.
கணபதி விழா: கிராமங்களில் கல்வி அறிவில்லா மக்களிடையே தெய்வீக விழாவை தேசிய உணர்வோடு கொண்டாடும் வழக்கத்தை 1893-ல் ஏற்படுத்தினார்.
தேசியப் பணி:
திலகரின் பொதுப்பணி தேசிய பணியை மையமாக கொண்டிருந்தது.தேசியப் பணியில் பொதுமக்கள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம் செயல்பட்டார்.
சிவாஜி விழா:
சிவாஜியை முகலாய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரனாக உருவகித்து காட்டி அவருக்கு விழா எடுப்பதன் மூலம் மக்கள் தேசிய விடுதலை உணர்வு பெற வழி வகுத்தார்.
முதல் சிறைவாசம்: பிளேக் நோய் தடுப்பு ஆணையர் ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் அயர்ஸ்ட் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட திலகரின் எழுத்துக்கள்தாம் காரணம் எனக் குற்றஞ்சாட்டி அவருக்கு 18 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை அளிக்கபட்டது.
வந்கப்பிரிவினைக்கு எதிர்ப்பு:
வந்கப்பிரிவினையை எதிர்த்து கேசரி இதழில் கட்டுரை எழுதிய அவர் “சுயராஜ்யம் அல்லது சுய ஆட்சி கோரும் நேரம் வந்துவிட்டது” என அரை கூவல் விடுத்தார்.
சுயராஜ்யம்
சுதேசி இயக்கம்
அன்னியப் பொருட்கள் புறக்கணிப்பு
என்ற திரிசூலத் தாக்குதல்களை அரசு மீது தொடுத்தார்.
தீவிரவாதம்:
அன்னிய ஆட்சியை அறவே வெறுத்த திலகர் அதன் நல்லெண்ணத்திலோ அரசியலமைப்பு சீர்திருத்தங்களிலோ நம்பிக்கை கொள்ளவில்லை. 1907ல் சூரத் காங்கிரசின் பிளவின்போது தீவிரவாதிகளின் தலைவராக திகழ்ந்தார்.
மண்டலே சிறைவாசம்:
வெடிகுண்டு வீசுவதை ஆதரித்து எழுதினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பர்மாவிலுள்ள மண்டலே சிறையில் ஆரண்டு அடைக்கப்பட்டார்.
சுய ஆட்சி கழகம்: 1914ல் திலகர் விடுதலை பெற்று நாடு திரும்பினார். தேசியவாதிகளிடையே சுய ஆட்சி ஆர்வத்தை மூட்டுவதற்காக சுய ஆட்சிக் கழகத்தை நிறுவினார்.
மீண்டும் காங்கிரசில்:
1915ல் காங்கிரஸ், தீவிரவாதிகள் மீதான தடையை அகற்றியது. மறு ஆண்டில் (1916) திலகர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். லக்னௌ காங்கிரசில் லீக்கட்சியுடன் ஓர் உடன்பாடு காண உறுதுணையாக இருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு அதிர்ச்சியடைந்த திலகர் அதுபற்றி நீதி விசாரணை நடத்துமாறு அரசை வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆதரித்தார்.
மறைவு:
எழுச்சியுற்ற இந்திய தேசத்தின் சின்னமாக திகழ்ந்த திலகர் 1920 ஜூலை 31 இரவு உயிர் நீத்தார்.