வங்கப்பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் தீவிரவாதமும் சுதேச இயக்கமும் பரவின.
வங்கத்தில் பெபின் சந்திரபாலும் மராத்தியத்தில் திலகரும் பஞ்சாபில் லஜபதிராயும் போல தமிழகத்தில் வ. உ. சிதம்பரம்பிள்ளை தீவிர தேசியவாதத்தின் சின்னமாக விளங்கினார்.
சிதம்பரம் மாவட்டத்தில் ஒட்டபிடாரம் என்ற ஊரில் பிறந்த சிதம்பரம்பிள்ளை வழக்கறிங்கராக தம் வாழ்கையை தொடங்கினார்.
இயல்பிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக திகழ்ந்தார்.
சுதேசி கப்பல் கம்பெனி:
அக்காலத்தில் தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இடையே பிரிட்டிஷ் ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கில வணிகக் குழுவினர் கப்பல் போக்குவரத்து நடத்தி வந்தனர்.
அதற்கு எதிராக 1906ல் சுதேச ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை தொடங்கினார். அக்கம்பெனிக்கு காலியா, லாவோ என்ற கப்பல்கள் வாங்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்பு மற்றும் சிதம்பரம்பிள்ளையின் அரசியல் போராட்டம் காரணமாகவும் சுதேசி கப்பல் கம்பெனி வெற்றி பெறவில்லை.
சூரத் காங்கிரசில் சிதம்பரம்பிள்ளை:
காங்கிரசில் திலகர், பெபின் சந்திரபால் போன்ற தீவிராதிகளையே சிதம்பரனார் ஆதரித்தார்.
சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்னையிலிருந்து நூற்றுக்கும் அதிகமான தீவிரவாத பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு சென்றார். மாநாட்டில் குழப்பம் ஏற்பட்ட பொது அவர்கள் திலகரை சூழ்ந்து பாதுகாத்தனர்.
பெபின் சந்திரபால் விடுதலை விழா:
நீதிமன்றத்தில் வங்கப் புரட்சித் தலைவர் பெபின் சந்திரபாலுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் நீதிமன்றம் ஆறு மாத சிறை தண்டனை அளித்தது.
தண்டனை முடிந்து அவர் விடுதலை பெற்ற தினத்தை அரசியல் பெருவிழாவாக கொண்டாடத் தீர்மானித்தார்.
ஆனால் அரசு அன்றைய தினம் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்தது. தடையை மீறி அவர் திருநெல்வேலியில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த நெல்லை கலெக்டர் விஞ்ச் தம்மை வந்த காணுமாறு சிதம்பரனாருக்கு ஆணை பிறப்பித்தார். கலெக்டரை சந்திக்க சென்ற அவரை அச்சந்திப்பு முடிந்தவுடன் கைது செய்தனர்.
செக்கிழுத்த செம்மல்:
சிதம்பரனார் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த நெல்லை மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் சிறை வாசலிலேயே அரச நிந்தனைப் பேச்சு பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.
அவருக்கு இரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு முன் வேறு எந்த தேச பக்தருக்கும் இத்தகைய நீண்ட கால சிறை தண்டனை அளிக்கப்பட்டதில்லை.
கோவை சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரனார் துன்புறுத்தப்பட்டார். செக்கிழுக்குமாறு கொடுமைப்படுத்தப்பட்டார்.
விடுதலைக்கு பின்னர் சிதம்பரனார்:
நாலரையாண்டு சிறைவாசத்திற்கு பின் சிதம்பரனார் விடுதலை பெற்றார். புதுவைக்கு சென்று தமது நண்பரும் தேசியகவியுமான பாரதியாரை சந்தித்து ஆறுதல் பெற்றார்.
1920ல் கல்கத்தா காங்கிரசில் கலந்து கொண்ட அவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கப் போராட்ட திட்டம் பிடிக்காமல் காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார்.
எனினும் அதன் பின்னரும் காங்கிரஸ் கூடங்களில் கலந்து கொண்டார்.
1925ல் காஞ்சிபுரம் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1928ல் சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
1933ல் காந்தியடிகள் தூத்துக்குடி வருகைபுரிந்த பொது வரவேற்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
1936 நவம்பர் 26ல் தூத்துக்குடியில் காலமானார்.
மரணத்தருவாயில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம் “ என்ற பாரதியின் பாட்டை கேட்டு கொண்டே இறுதி மூச்சை விட்டார்.