திருவருட் பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் பிறந்தார்.
இயற்பெயர்:இராமலிங்கர்
காலம் : 05.10.1823. –30.01.1874
பெற்றோர்: இராமையா, சின்னம்மை.
இறையருள் பெற்ற திருக்குழந்தை என பாராட்டப்பட்டவர்.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
சென்னையிலுள்ள கந்தக்கோட்டத்து இறைவனை மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே தெய்வமணிமாலை.
திருவொற்றியூர் சிவபெருமான் மீது எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் நூலையும் பாடியுள்ளார்.
வடலூரில் சத்தியதருமசாலையை நிறுவி சாதி மத வேறுபாடின்றி பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார்.
இராமலிங்கர் அருளிய பாடல்கள் அருட்கருணை நிறைந்தவை. ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களை திருவருட்பா என மக்கள் போற்றுகின்றனர்.