நீரின்றமையா உலகம் போல  - காதல் நெஞ்சம்
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல  - ஏமாற்றுதல் , வஞ்சித்தல்
என்பிலாதனை வெயில் போல  - அன்பில்லாதவன் அறம்
செம்புலப் பெயல்நீர் போல  - அன்புடைய நெஞ்சம்
வினையிடை நின்ற சான்றோர் போல  - பழி நீங்காமை
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை  - தாமே பாராட்டி கொள்வர்
சுரை ஆழ அம்மி மிதப்ப  - கீழோர் செல்வச்செழிப்போடு வாழ்தல்
மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல  - மகிழ்ச்சி
சமன்செய்த சீர்தூக்குங் கோல் போல  - சான்றோர்க்கு அழகு
நோய் நாடி நோய் முதல் நாடி  - வாய்ப்பச் செயல்
ஞானம் வரும் முன் மோதும் பகை போல  - நடுங்குதல்
காக்கை கரவா கரைந்துண்ணும்  - சுற்றத்தார் சூழ வாழ
உளப்போல இல்லாகித் தோன்றாக் கெடும்  - அழிந்து போதல்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல  - பொறுத்தல்
புனையா ஓவியம் போல  - துறவு நிலை
சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு  - கெட்டழிதல்
வரையா மரபின் மாரி போல  - கொடுக்கும் தன்மை
வேலியே பயிரை மேய்ந்தது போல  - துரோகம்
கடலில் கரைத்த காயம் போல  - பயனற்றுப் போதல்
குன்றிலிட்ட விளக்கு போல  - பிரகாசமாக
பகலவனைக் கண்ட பனிபோல  - மறைதல்
பருத்தி புடவையாய் காய்த்தார்போல  - அதிசயம்
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப்போல்  - மாந்தருக்குள் மறைந்திருக்கும் திறன்
மழைக்கண்ட பயிர்போல்  - மகிழ்ச்சி
காட்டுத்தீ போல்  - விரைவாக பரவியது
காராண்மை போல ஒழுகுதல்  - மழை
இரட்டைக்கிளவி போல  - இணைந்திருத்தல்
கவின் மலர் வாசம் போல  - ஒத்த சிறப்புடையது
விரைமலர்த் தாமரை போல  - விளங்குதல்
ஒருமையுள் ஆமை போல  - அடக்கம்
அலைகடல் துரும்பென  - இளைத்தல்
பசுமரத்தாணிப்போல  - ஆழமாக எளிதாக
உடுக்கை இழந்தவன் கைப்போல  - நட்பு
மழைக்காணாப் பயிர் போல  - வாடுதல்
கல்மேல் எழுத்துப்போல்  - நிலைத்து நிற்தல்
விழலுக்கு இறைத்த நீர்ப்போல்  - வீண் போதல்
 
Top