திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
வேறு பெயர்கள்:
உத்தரவேதம், முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், திருவள்ளுவம்.
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்;
வள்ளுவநாயனார், தேவர், மாதானுபங்கி, முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், செந்நாபோதார், பெருநாவலர், பொய்யில் புலவர்.
திருக்குறளின் மொத்த அதிகாரங்கள் 133.
மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1330.
9 இயல்களைக் கொண்டது.
இது ஈரடிகளில் இயற்றப்பட்டதாயினும் விரிவான பொருளை தருகிறது.
இது மூன்று பிரிவுகளை கொண்டது: அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால்.
அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும், காமத்துப்பால் 25 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்.
இந்நூல் உலகப்பொதுமறை என போற்றப்படுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன ஒரே நூல் திருக்குறள். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெற்றது.
இந்நூல் அ'கரத்தில் தொடங்கி ன'கரத்தில் முடிகிறது.
திருக்குறளின் சிறப்பை எடுத்து கூறும் நூல் திருவள்ளுவமாலை.
ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் முதலிய உலகமொழிகள் பலவற்றிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி. யு. போப்.
அறத்தான் வருவதேன் இன்பம், பெண்ணிற் பெருந்தக்க யாவுள, முயற்சி திருவினையாக்கும், இடுக்கண் வருங்கால் நகுக, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - இவை திருக்குறளில் இடம் பெரும் முக்கிய மேற்கோள்கள்.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.