பாரதிதாசன் 29 – 4 – 1891 இல் புதுச்சேரியில் பிறந்தார்.
இயற்பெயர் - சுப்புரத்தினம்.
பெற்றோர் - கனகசபை, இலக்குமியம்மாள் என்பவராவார்.
சிறப்பு பெயர்கள் - புரட்சிகவிஞர், பாவேந்தர்
பாரதியின் மேல் கொண்ட பற்றால் இவர்தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
இவர் ஆங்கில மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர்.
பாரதியார் புதுச்சேரியில் இருந்தபோது அவருடன் கொண்ட தொடர்பு இவரை எளியநடையில் எழுதவும் பாரதிதாசன் என்று பெயர் கொள்ளவும் தூண்டுவதாயிற்று.
‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சார்ந்த சுப்புரத்தினம்' என்று பாரதியார் இவரை ஏற்றுக்கொண்டதும் இவர் தம்மை பாரதிதாசன் என்று அழைத்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரை பின்தொடர்ந்த கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரை என்று பெயர்பெற்றதும், அவர்களும் தம்மை வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினதாசன் (சுரதா) என்று இவ்வகையான புனைபெயர்கள் கொண்டதும் தமிழ் வரலாற்றில் குறிப்பிடத் தகும் நிகழ்வுகளாகும்.
இயற்றிய நூல்கள் - பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, சேரன் தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, தமிழியியக்கம், குடும்ப விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகள்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர்.
மறைவு - 21- 4 - 1964
தமிழக அரசு பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கி வருகிறது.
திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து சிறப்பு சேர்த்துள்ளது.