வீரமாமுனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி.

கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை என்று பொருள். ஆகவே இவர் தம் பெயரை தைரியநாதசாமி என்று மாற்றி கொண்டார்.தமிழ் சான்றோர் இவரை வீரமாமுனிவர் என்று அழைத்தனர்.

1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் முப்பத்தேழாண்டுகள் சமயப் பணியும் தமிழ் பணியும் புரிந்துள்ளார்.

சிற்றிலக்கியங்கள், உரைநடை, அகராதி, மொழிபெயர்ப்பு, இலக்கணம், பெருங்காப்பியம் என்று தமிழிலக்கிய வரலாற்றில் அவரது பங்களிப்பு நிலைபேறுடையதாக விளங்குகிறது.

இவர் தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டனையும் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு எனும் இடத்தில் இயற்கை எய்தினார்.
 
Top