தாதாபாய் நௌரோஜி

'”இந்தியப் பெருங்கிழவர்" (The Grand oldman of India) என அழைக்கப்பட்ட நௌரோஜி இந்திய விடுதலைக்காக பாடுபட்ட பழம் பெரும் தலைவர்.

பிறந்த இடம் - மகாராஷ்டிராவிலுள்ள காடாக்.

பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில்  கல்வி பயின்று பேராசிரியராக தன வாழ்கையை தொடங்கினார்.

1855இல் ஒரு பார்சி நிறுவனத்தின் பங்குதாரராக இங்கிலாந்து சென்றார்.

1869இல் இந்திய திரும்பி பரோடா திவானாகச் சிறிது காலம் பணியாற்றினார்.

1892இல் பிரின்ஸ்பரி தொகுதியிலிருந்து லிபரல் கட்சி வேட்பாளராக இங்கிலாது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு உறுப்பினரான முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

பார்சி இன மறுமலர்ச்சிக்காக தொடக்கப்பட்ட “ ரஹ்னுமை மஸ்டாயஸ்னான்”  என்ற இயக்கத்தில் சேர்ந்து அதன் நோக்கத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பளித்தார்.

பம்பாயில் பெண்கள் உயர்நிலை பள்ளியை நிறுவினார்.

1852-ல் பம்பாய் கழகம் தொடங்கப்பட காரணமாயிருந்தார்.

லண்டன் இந்திய கழகம், கிழக்கிந்திய கழகம் ஆகியவற்றை உருவாக்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க காலத்திலிருந்து அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மும்முறை ( 1886, 1893, 1906) அக்கட்சியின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1906 -ல் கல்கத்தா காங்கிரசில் சுயராஜ்யம் ( அல்லது சுய கட்சி) என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

1901- ல் தாம் வெளியிட்ட '” Poverty and Un-British Rule in India என்ற தலைப்பில் வெளியிட்ட நூலில் இந்தியா  ஏழ்மை நிலையடைய பிரிட்டிஷாரின்  பொருளியல் சுரண்டல் தான் காரணம் என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

 

 
Top