இந்தியாவின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகைசெய்யும் வகையில் உணவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இது தான் உலகிலேயே மிகப் பெரிய மக்கள் நலத்திட்டமாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்

வாய்வழி வாக்கெடுப்பு மூலம் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.

மானிய விலை உணவு தானியங்கள் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.

கிராமப்பகுதிகளில் 75 சதவீதம் மக்களுக்கும் நகர்ப் புறங்களில் 50 சதவீதம் மக்களுக்கும் மலிவு விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்யும்.

ஒவ்வொரு நபருக்கும் , கிலோ 3 ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் ஐந்துகிலோ அரிசி அல்லது கிலோ 2 ரூபாய் என்ற அடைப்படையில் ஐந்து கிலோ கோதுமை அல்லது கிலோ 1 ரூபாய் என்ற விலையில் மாதம் ஐந்து கிலோ தானியங்களோ வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

இந்த மலிவு விலை நிர்ணயம் 3 வருடங்களுக்கு மாறாமல் இருக்கும்.

இந்த மலிவு விலை தானியத்துக்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை மத்திய அரசின் வரையறைகளுக்கு ஏற்ப மாநில அரசு அடையாளம் காணும்.

கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊட்ட சத்து உணவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை பேறு நலநிதியாக ரூ.6000 வழங்கப்படும்.

6 முதல் 14 வயது குழந்தைகளுக்கும் ஊட்ட சத்துணவு உறுதி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 6.2 கோடி டன் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1.25 ஆயிரம் கோடி செலவாகும்.

சட்டீஸ்கர் மாநிலம் 2012  ஆம் ஆண்டிலேயே  Chhattisgarh  Food  Security Act   2012 என்ற சட்டத்தை அந்த மாநிலத்திலுள்ள 90 % மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நமது தமிழகத்திலும், மத்திய பிரதேச மாநிலத்திலும் ஏற்கனவே மிகக்குறைந்த / இலவச மானிய உணவு பொருள்கள் திட்டம் நடைமுறையிலுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் தோன்ற முக்கிய காரணமாக இருக்கும் சோனியா காந்தி அவர்கள் ஓட்டெடுப்பு நடைபெறும் போது மருத்துவமனையில் இருந்ததால் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

 
Top